Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th February 2019 10:49:27 Hours

பசிபிக் பேரழிவு ஒத்துழைப்பு குழுவினர் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியை சந்திப்பு

பசிபிக் பேரழிவு ஒத்துழைப்பு குழுவின் பிரதானியுமான எயார் கொமடோர் ரிசட் டேவிட் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டனர். அச்சமயத்தில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களை இந்த குழுவினர் இம்மாதம் (5) ஆம் திகதி உத்தியோகபூர்வமா சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

அவுஸ்திரேலியா அடிப்படையிலான ஐ.பீ.ஈ தலைமைத்துவம் நிச்சயிக்கப்பட்ட பணிப்பாதுகாப்பு, தற்போது இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் கூட்டுறவு, பங்குதாரர் திறன் மற்றும் இராணுவ உட்புறத் தன்மை ஆகியவை தொடர்பாக ஒரு பயணத்தில் தற்பொழுது ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு துறைமுகத்திற்கு கூடுதலாக இரண்டு கப்பல்களுடன் கொழும்பு துறைமுகத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பான விபரங்களும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கெப்டன் சூன் அன்வன், லெப்டினன்ட் கொமடோர் பிலிப் கரட், பாதுகாப்பு விளையாட்டு அதிகாரி, திரு ஈயன் எட்வட்ஷ், செல்வி ஜெனி ஒப் ஐபிஈ கீ அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பிரதிநிதி குழுவினர் இச்சந்திப்பின்போது கலந்து கொண்டனர். பின்னர் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியினால் வருகை தந்த வெ ளிநாட்டு பிரதிநிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இறுதியில் எயார் கொமடோர் ரிசட் டேவிட் அவர்களினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிடப்பட்டது.Running sports | UK Trainer News & Releases