Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th November 2022 18:53:56 Hours

நினைவு தூபிக்கு பொப்பி மலர்களால் நினைவஞ்சலி

இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் உலகப் போரில், உலகளவில் உயிர்நீத்த வீரர்களின் நினைவுகளை நினைவுகூரும் நினைவு தினம் (நவம்பர் 11) இன்று (13) காலை கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவில் அமைந்துள்ள நினைவு தூபியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயளாலர் ஜெனரல் ஜி.டி.எச். கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபி யூஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பில் அவர்களுடன் முப்படைப் பிரதிநிதிகளும் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். அத்துடன் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத்தில் சேவையாற்றும் மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகள் மற்றும் படையினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் அலுவலகப் பணியாளர்களுடன் அன்றைய பிரதம அதிதி மற்றும் அழைப்பாளர்களை வரவேற்றதுடன் நினைவு தூபியில் பொப்பி மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாதுகாப்புச் செயலாளர், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் போர் நினைவு தூபிக்கு பொப்பி மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர். இராணுவ பிரதிப் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களும் இராணுவத் தளபதிக்கு பதிலாக நினைவுத் தூபிக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இராணுவ சம்பிரதாய மரியாதை நிகழ்வுகளுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

நினைவு தினம் (நினைவு தினத்தில் பாரம்பரியமாக பொப்பி மலர் அணிவதால் பொப்பி தினம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது பொதுநலவாய உறுப்பின நாடுகளில் முதல் உலகப் போரின் முடிவில் இருந்து கடமையின் போது உயிர் நீத்த ஆயுதப்படை உறுப்பினர்களை கௌரவிப்பதற்காக அனுசரிக்கப்படும் நினைவு நாள் ஆகும். 1919 ஆம் ஆண்டு ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரால் தொடங்கப்பட்ட ஒரு பாரம்பரியத்தை பின்பற்றி, பல பொதுநலவாய அல்லாத நாடுகளில் போர் நினைவு நாளக இந்த நாள் குறிக்கப்படுகிறது.