Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th October 2023 20:45:11 Hours

நாடளாவிய ரீதியில் இலங்கை இராணுவத்தினரால் 74 வது இராணுவ தின கொண்டாட்டம்

74 வது இராணுவ தினத்தை முன்னிட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதல்களுக்கமைய நாடு முழுவதும் உள்ள இராணுவ நிறுவனங்களில் இராணுவ தினம் (ஒக்டோபர் 10) எளிமையான மற்றும் சுருக்கமான வகையில் கொண்டாடப்பட்டன.

அதற்கமைய முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் படையினர் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நிகழ்வுகளை ஏற்பாடுசெய்திருந்தனர்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கொடியை ஏற்றிவைத்ததுடன் படையினரால் இராணுவ கீதம் இசைக்கப்பட்டது. முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பொது பணி அதிகாரி 1 இராணுவத் தளபதியின் இராணுவ தின செய்தியைப் வாசித்தார். அத்துடன் அனைத்து நிலையினருடனான மதிய உணவு விருந்துடன் நிகழ்வு நிறைவுற்றது.

அதேநேரம், பல்லேகலை 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.எம் ரணசிங்க டபிள்யூ.டபிள்யூ.வீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் பங்கேற்புடன் 74 வது இராணுவ தினம் கொண்டாடப்பட்டது. படைப்பிரிவின் தளபதி மத்திய கொடியை ஏற்றியதும் படையினர்களால் இராணுவ கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து நிலையினருக்கான மதிய உணவு விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவு செய்வதற்கு முன்னதாக, படையினரால் மரம் நடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டன.

அதன்படி, 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எ.ஜே.என் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வருகையுடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் படையினரால் இராணுவ கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னர் இராணுவ கொடி ஏற்றப்பட்டதுடன் வளாகத்தில் தென்னங்கன்று ஒன்றும் நடப்பட்டது. அத்துடன் அனைத்து நிலையினருக்கான மதிய உணவு விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவுற்றது.

பனாகொட இலங்கை காலாட் படையணி தலைமையக மைதானத்தில் இராணுவ தின அணிவகுப்பை காண ஒவ்வொரு இடத்திலும் படையினருக்கு வசதி செய்யப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

அதே நேரத்தில் 74 வது இராணுவ தினத்தை முன்னிட்டு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வை.எ.பி.எம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 52 காலாட் படைப் பிரிவின் பிரதி தளபதி பிரிகேடியர் டபிள்யூ.எல்.எ.சீ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீழ் இரண்டு சமூக திட்டங்களை அப்பகுதியில் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 08) கைதடியில் உள்ள யாழ் பார்வையற்றோர் சங்கத்தில் வசிக்கும் விசேட தேவையுடைய 35 நபர்களுக்கு போஷாக்கான மதிய உணவு வழங்கப்பட்டது. மறுநாள் (ஒக்டோபர் 09) 40 படையினரால் மிருசுவில் பிரதேச வைத்தியசாலையிலும் அதன் சுற்றுப்புற பகுதியிலும் 'சிரமதான' பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த இரண்டு சமூக நிகழ்ச்சிகளிலும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர். இதேவேளை, இலங்கை இராணுவத்தின் 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 521 வது காலாட் பிரிகேட் படையினரால் மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்து 2023 ஒக்டோபர் 10 பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலை வளாகத்தில் சமூகம் சார்ந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

521 வது காலாட் பிரிகேட்தளபதி கேணல் எம்.எச்.ஆர் பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதே போன்று, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 553 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜே.எஸ்.கே. பெரேரா ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவத்தின் 74வது ஆண்டு நிறைவு விழாவை விசுவமடு பிரதேசத்தில் பல சமூகத் திட்டங்களுடன் கொண்டாடப்பட்டது.

ஆண்டு நிறைவு நாளில் (ஒக்டோபர் 10), 553 வது காலாட் பிரிகேட் மற்றும் 6 வது இலங்கை சிங்க படையணியின் படையினரால் தருமபுரத்தில் உள்ள நமச்சிவாய முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது. மேலும் ஒரு திட்டமாக 14வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் தேராவில் கனோஜி பாலர் பாடசாலை சிறார்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதேபோன்று, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 231 வது காலாட் பிரிகேட்டின் 7 வது இலங்கை பீரங்கி படையினரால் செவ்வாய்கிழமை (ஒக்டோபர் 10) சமூக திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

231 வது காலாட் பிரிகேட்டின் சிவில் அலுவல்கள் அதிகாரி மற்றும் 7 வது பீரங்கி படையணியின் ஒத்துழைப்புடன் 7 வது பீரங்கி படையணியின் தலைமையிலான இந்த நிகழ்வு, இலங்கை இராணுவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க தடங்களை குறிக்கும் வகையில், பின்தங்கியவர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. ஹிங்குராங்கொடையில் உள்ள மினிஹிரி பெண்கள் பெண்கள் மீட்பு மையத்தில் பெண்களுக்கு இசை பொழுதுபோக்குடன் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இலவச பொதிகள் விநியோகம் செய்யப்பட்டன.

இதேபோல், வட - மத்திய முன்னரங்க பராமரிப்புப் பிரிவின் கீழ் பணியாற்றும் படையினர் 74 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரத்தில் உள்ள ‘தயா ஆராமயவில் ‘சிரமதான’ பணியை முன்னெடுத்தனர்.

இத் திட்டத்திற்கு வட - மத்திய முன்னரங்க பராமரிப்புப் பிரிவின் தளபதி தேவையான வழிகாட்டுதலை வழங்கினார்.