Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th March 2024 19:06:09 Hours

தொண்டர் படையணி நடத்தும் படையணிகளுக்கிடையிலான கரப்பந்துப் போட்டி - 2024

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி. மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி படையணிகளுக்கு இடையிலான கரப்பந்து சம்பியன்ஷிப் – 2024 22 மார்ச் 2024 அன்று வெற்றிகரமாக பனாகொட இலங்கை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நிறைவிற்கு வந்தது.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் எம்கே. ஜயவர்தன ஆர்எஸ்பீ .வீஎஸ்வீ யுஎஸ்பீ மற்றும் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டீகேஆர் சில்வா கேஎஸ்பீ ஆகியோரின் வருகையுடன் நிகழ்வு ஆரம்பமானது. தொண்டர் படையின் படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் 2024 மார்ச் 18 முதல் 21 வரை இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையக ரெண்டெஸ் மைதானத்தில் ஆரம்ப சுற்று போட்டிகளில் போட்டியிட்டன.

பெண்கள் பிரிவில் 2 வது (தொண்டர்) இலங்கை இராணுவ மகளிர் படையணி சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது. சூப்பர் லீக்கில், இலங்கை சிங்கப் படையணி இலங்கை இலேசாயுத காலாட் படையணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இலங்கை இராணுவ சேவைப் படையணி பிரிவு சாம்பியன்ஷிப்பைப் பெற்றுக்கொண்டது. இலங்கை பொறியியல் படையணி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.

மேற்குப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம். பெர்னாண்டோ டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். அவர்களை தொண்டர் படையணி பிரதி தளபதி அவர்கள் அன்புடன் வரவேற்றார். பிரதம அதிதி, தொண்டர் படையணி பிரதி தளபதி மற்றும் பயிற்சி பரிசோதகர் பிரிகேடியர் டப்ளியுஜிபீ சிசிர குமார ஆர்எஸ்பீ ஆகியோர் சாதனையாளர்களுக்கு கின்னங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

பயிற்சி பரிசோதகர் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

போட்டியாளர்களின் தனிப்பட்ட திறன்கள் பின்வருமாறு;

சூப்பர் லீக்-

சிறந்த சேவை

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் காலாட்படை வீரர் கே.எம்.எஸ்.சாம குமார

சிறந்த பெறுநர்

இலங்கை இராணுவ சிங்க படையணியின் லான்ஸ் கோப்ரல் கே.ஏ.சி மதுசங்க

சிறந்த அமைப்பாளர்

இலங்கை சிங்கப் படையணியின் காலாட் படை வீரர் டபிள்யூ.ஜி. மகேஷ்

சிறந்த தடுப்பாளர்

இலங்கை சிங்கப் படையணியின் லெப்டினன் எஸ்.எச்.எச் நளின்

சிறந்த பாதுகாவலர்

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய் ஏ.டீ குமாரசிங்க

சிறந்த அறைதல்

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய் கே.எம்.எஸ். சமன் குமார

சிறந்த வீரர்

இலங்கை சிங்கப் படையணியின் கோப்ரல் எஸ்.ஐ மதுஷன்

மகளிர் படையணி

சிறந்த அமைப்பாளர்

2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் டி.எம்.டி.கே. திசாநாயக்க

சிறந்த அறைதல்

இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் டி.ஏ.எஸ்.என். பாலசூரிய

சிறந்த வீராங்கனை

2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்.எல்.செனாரத்ன

‘ஏ’ பிரிவு -

சிறந்த அமைப்பாளர்

இராணுவ சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் பீ.வி.ஆர். சந்தருவன்

சிறந்த அறைதல்

இராணுவ சேவைப் படையணியின் சிப்பாய் எம்.எச்.ஏ.எஸ்.தர்மபால

சிறந்த வீரர்

இராணுவ சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.டி.எம்.விக்ரமசிங்க