Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

தேசிய தடகள போட்டிகளில் பங்குபற்றவுள்ள இலங்கை

எதிர்வரும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களை தெரிவுசெய்யும் ’99 வது தேசிய சம்பியன்ஷிப்’ போட்டியில் இலங்கை சமிக்ஞை படையணியின் பெண் வீராங்கனைகள் பங்குபற்றி தகுதி பெற்றுகொண்டனர்.

ஒக்டோபர் 30 முதல் 31 வரை சுகததாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் இலங்கை சமிக்ஞை படையணியின் வீராங்கனைகள் புதிய புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளனர்.

அதன்படி, 11 இலங்கை சமிக்ஞை படையணியின் லான்ஸ் கோப்ரல் கே.எல்.எஸ்.கே பெரேரா கோலூன்றிப் பாய்தல் போட்டியில் (3 மீ 57 செ.மீ) பாய்ந்து சாதனையை புதுப்பித்து முதலிடத்தை பிடித்தார். மேலும், 2 (தொ) இலங்கை சமிக்ஞை படையணியின் லான்ஸ் கோப்ரல் கேஜீடிஎம்எஸ் குமாரசிங்க 800 மீ ஓட்டப் போட்டியில் (2 நிமிடம் 2 செக்கன்கள் 52 Ms) பதிவு செய்து முதலிடத்தை பெற்றதுடன் 400மீ ஓட்டப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற இலங்கை வீரர் பதிவு செய்த சாதனையை மேற்படி வீரர் முறியடித்து முதலிடத்தை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை சமிக்ஞை படையணியின் வீராங்கனைகளின் குறிப்பிடத்தக்க சாதனைகள் வருமாறு,

கோப்ரல் டீஏஜீஜே விமலசிறி – 3 வது இலங்கை சமிக்ஞை படையணி தூரம் பாய்தலில் முதலிடம்

லான்ஸ் கோப்ரல் டீஎம்டீஎஸ் திசாநாயக்க – 5 வது இலங்கை சமிக்ஞை படையணி 5000 மீட்டர் போட்டிகளில் முதலிடம்

லான்ஸ் கோப்ரல் கேஎல்எஸ்கே பெரேரா – 11வது இலங்கை சமிக்ஞை படையணி கோலூன்றி பாய்தல் போட்டிகளில் முதலிடம்

லான்ஸ் கோப்ரல் டீடிஏ சில்வா – 2 வது(தொ) இலங்கை சமிக்ஞை படையணி 100 மீ போட்டிகளில் முதலிடம்

லான்ஸ் கோப்ரல் கேஜீடிஎம்எஸ் குமாரசிங்க – 2வது (தொ) இலங்கை சமிக்ஞை படையணி 400 மீ போட்டிகளில் முதலிடம்

சமிஞ்ஞை படையின் மகளிச் சிப்பாய் எம்.வை.எப். சாபியா 2 (தொ) இலங்கை சமிக்ஞை படையணி 100 மீ போட்டிகளில் மூன்றாமிடம்

பயிலுனர் சிப்பாய் கேஏஏ செவ்வந்தி 1 வது இலங்கை சமிக்ஞை படையணி முப்பாய்ச்சலில் 3 ஆம் இடம்