Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

தேசிய குறுகிய நீச்சல் சாம்பியன்ஷிப் - 2022 போட்டியில் இராணுவ நீச்சல் வீரர்கள் வெற்றி

டிசம்பர் 26-30 ம் திகதி வரை கொழும்பு இசிபதன கல்லூரி நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற தேசிய குறுகிய நீச்சல் சம்பியன்ஷிப்- 2022 போட்டியில் போட்டியிட்ட இராணுவ நீச்சல் வீரர்கள் 7 தங்கப் பதக்கங்கள், 12 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் இரண்டாம் இடத்தின் வெற்றி கிண்ணத்தை (ஆண்கள் பிரிவில்) பெற்றனர். நாட்டில் உள்ள 49 பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் 378 நீச்சல் வீரர்கள் போட்டியில் பங்குபற்றினர்.

கஜபா படையணியின் இரண்டாம் லெப்டினன் எச்.டி.ஏ பீரிஸ் - ஆண்கள் பிரிவில் சிறந்த நீச்சல் வீரராக தெரிவு செய்யப்பட்டார்.

இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானேகே அவர்கள் நீச்சல் போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கு வழிகாட்டல் மற்றும் தேவையான ஆதரவை வழங்கினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.