Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th May 2020 17:20:59 Hours

தெற்கு சூடானில் இலங்கை இராணுவ வைத்திய குழுவிற்கு ஐ.நா.வின் பாராட்டு பதக்கங்கள்

தென் சூடான் ஐக்கிய நாடுகள் நடவடிக்கை கட்டம் II இன் மருத்துவமனையில் பணியாற்றும் இலங்கை இராணுவ வைத்திய படையணியின் படையினருக்கு ஐ.நா அமைதி காக்கும் பதக்கங்கள் புதன்கிழமை 27ம் திகதி தென் சூடானில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன.

ஐ.நா அமைதி காக்கும் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷைலேஷ் சதாஷிவ் தினைகர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஐ.நா. பதக்கங்களை வழங்கினார். லெப்டினன்ட் கேணல் எஸ்எல்எஸ் குமாரகே யின் கட்டளையின் கீழ் 16 அதிகாரிகளும் 50 படையினரும் இந்த இலங்கை இராணுவ வைத்திய படையணியின் குழு பாராட்டப்படுகின்றது.

லெப்டினன்ட் ஜெனரல் ஷைலேஷ் சதாஷிவ் தினைகர் மற்றும் ஐநா வின் தென் சூடான் நடவடிக்கைகான அலுவலகத் தலைவர் செல்வி டெபோரா கிவென் ஸ்கெய்ன் ஆகியோர் தென் சூடான் நடவடிக்கையில் இலங்கை இராணுவ வைத்திய படையணியின் மருத்துவத் தரம், சிகிச்சை மற்றும் வலுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் அங்கீகரித்து பாராட்டினர். இலங்கை குழுவானது 2019 ஜூலை மாதம் 03 ம் திகதி முதல் அங்கு சேவை செய்து வருகிறது.

இலங்கை படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு கலை நிகழ்ச்சியுடன் விழா நிறைவுப் பெற்றது. short url link | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today