Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th November 2023 22:05:43 Hours

தீகவாப்பிய 'புனித சர்வ ஞான தாதுகள்' மற்றும் மாணிக்கம் கண்காட்சி

தீகவாப்பிய தூபியின் உச்சியில் வைக்கப்படவுள்ள 'புனித சர்வ ஞான தாதுகள் 'மற்றும் விலைமதிப்பற்ற ‘மாணிக்கம்’ ஆகியவற்றின் கண்காட்சி ஊர்வலம் திங்கட்கிழமை (நவம்பர் 13) அம்பாந்தோட்டை பிரதேசத்தை சென்றடைந்தது. இந்த நிகழ்வு பெலியத்த ஸ்ரீ சுனந்தா விகாரையில் ஆரம்பமாகியது.

இந்த கண்காட்சி ஊர்வலம் 2023 நவம்பர் 30 வரை தொடரும். இந்த ஊர்வலமானது 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சி.எஸ்.முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ ஐஜி அவர்களின் தலைமையில் இடம்பெறுகின்றது.

பெலியத்த பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் காணிக்கையை இதன் போது செலுத்தலாம்.