Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st March 2023 20:51:22 Hours

திருகோணமலை 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்திக்கு இராணுவ தளபதி விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வெள்ளிக்கிழமை (31) கிழக்கு பகுதி திருகோணமலையில் உள்ள 22 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தைத் மேற்கொண்டார்.

22 வது காலாட் படைப்பிரிவின் நுழைவாயிலில் வருகை தந்த பிரதம அதிதியை கஜபா படையணி படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி கௌரவித்ததுடன் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீ அமுனுகம ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

பின்னர், இராணுவத் தளபதி அவர்கள் 22 வது காலாட் படைப்பிரிவின் கட்டளையின் கீழ் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றியதுடன் அங்கு அவர் கடினமான காலங்களில் தொழிலின் கண்ணியத்தையும் அவர்களின் ஒழுக்கத்தையும் பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்து காட்டினார். அனைத்து இனங்களின் உள்நாட்டு குடிமக்களுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் நல்லிணக்கத்தின் மூலம் தங்கள் கடமைகளை திறம்பட செய்ததற்காக படையினருக்கு நன்றி தெரிவித்தார். பல்வேறு சமூக விரோதிகள் மற்றும் பிற சக்திகளால் ஏமாற்றப்படாமல் தங்கள் உன்னத சேவையைத் தொடரவும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

உரையினை தொடர்ந்து 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீ அமுனுகம ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி, அவர் அங்கு வந்து படையினரை சந்தித்ததை பாராட்டினார்.

அடுத்து, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழு படங்கள் பெற்றுக்கொள்ளவதற்கு முன்னர் இராணுவத் தளபதி வளாகத்தில் மரக்கன்று நடுவதற்கு அழைக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மற்றும் கிழக்கில் சேவையாற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.