Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2024 20:29:32 Hours

தளபதியின் வழிகாட்டுதலில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையினரால் நாட்டிற்கு பல மில்லியன்கள் சேமிப்பு

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியினர் இராணுவத்தின் வாகன பராமரிப்பதிலும் மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளனர். இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி நாட்டிற்கான அந்நிய செலாவணியின் ஒரு பகுதியை சேமித்து இராணுவத்தின் டொயோட்டா கேம்ரி மொடல் வாகனங்களுடன் பத்து முழுமையாக புதுப்பிக்கப்பட்ட மிட்சூபிஷி லன்சர் சீஎஸ் -1 ஐ சீஎஸ் II ஆக சமீபத்தில் இணைத்துள்ளனர். அதற்கமைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இன்று (31) பிற்பகல் இராணுவத் தலைமையக வளாகத்தில் இந்த வாகனங்களை நேரில் பார்வையிட்டார்.

புதிதாக திருத்தப்பட்ட அந்த வாகனங்களை ஆய்வு செய்த பின்னர், நாட்டிற்கு அதிக அளவிலான அந்நிய செலாவணியை சேமிக்க, சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான முயற்சிகளுக்காக இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினரை இராணுவத் தளபதி பாராட்டினார். மேலும், இந்நிகழ்வில் சிரேஷ்ட இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் அதிகாரிகளை அறிவுறுத்திய இராணுவத் தளபதி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் பயனுள்ள உபகரணங்களையும் வாகனங்களையும் கரடுமுரடான நிலப்பரப்புகளிலும் ஏனைய சேவைப் பகுதிகளிலும் பயன்படுத்துவதற்கு உதிரிபாகங்கள் மற்றும் பிற பாகங்கள் இலகுவாகச் செலுத்துவதற்கு செலவழித்த மில்லியன்களை மிச்சப்படுத்திய புதுமையான நடவடிக்கையைப் பாராட்டினார்.

பெருந்தொகையான அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் வகையில் கொழும்பு அடிப்படைப் பணிமனை, கட்டுபெத்த தளப் பணிமனை, உட வளவே, அனுராதபுரம், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் இன்னும் சில பட்டறைகள் உட்பட அனைத்து மாகாண இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பட்டறைகளிலும் இத்திட்டம் இப்போது செயல்பாட்டில் உள்ளது. ஒதுக்கப்பட்ட மிதிவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், இலகுரக வாகனங்கள், வேன்கள், லாரிகள், டெரெக்வண்டிகள், கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் இராணுவ பயன்பாட்டிற்கு மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மாற்றியமைக்கப்பட்டு, திருத்தப்பட்டு வண்ணம் பூசப்படுகின்றன.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகம் மற்றும் கொழும்பு அடிப்படை பட்டறை ஆகியவை சீஎஸ் II ஆக மாற்றியமைக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட மிட்சூபிசி லென்சர் சீஎஸ் -1 ஆகியவற்றின் பழுதுபார்க்கும் பணிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.

இந் நிகழ்வில் பதவி நிலை பிரதானி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.