Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st December 2022 18:45:54 Hours

டீமோ நிறுவத்தினால் இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி

டீசல் மற்றும் மோட்டார் இன்ஜினியரிங் லங்கா நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து டாட்டா வாகனங்களின் பழுதுபார்ப்புக்கும் பெருமளவில் பொறுப்பேற்றுள்ள இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 20 அதிகாரிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி நிகழ்ச்சியை டிசம்பர் 15-16 திகதிகளில் சியாம்பலாப்பே டீமோ பணிமனை வளாகத்தில் ஏற்பாடு செய்தது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் ஆலோசனையின் பேரில் மின் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் ஜயசேகர அவர்களின் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் அதிகாரிகளின் ஆதரவுடன் இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

பயிற்சித் திட்டமானது, டாட்டா வாகனங்களின் பட்டறை முகாமை மற்றும் பராமரிப்பு பற்றிய ஆரம்ப அறிவைப் பெறுவதற்காக நடைமுறை அமர்வுகள் மற்றும் பயிற்சி பாடநெறிகள் நடைப்பெற்றது.