Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th September 2023 15:37:48 Hours

ஜெனரல் கமல் குணரத்னவினால் எழுதப்பட்ட இரண்டு புதிய நூல்கள் வெளியீடு

புதிய நூல்களான ‘தாராகா ஆகமணய’(ThaarageAagamanaya) மற்றும் ‘கடோல் ஆத்து’ (KadolEththu) ஆகியவற்றின் ஆங்கில பதிப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் டி.ஜி.எச் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ எம்பீல் அவர்களினால் வியாழன் (செப்டம்பர் 7) கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்ற விழாவின் போதுவெளியிடப்பட்டது.

இவ்விரு நூல்களின் முதற் பிரதிகளும் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இவ்விழாவில் வழங்கி வைக்கப்பட்டது.

நூலின் எழுத்தாளரான ஜெனரல் டி.ஜி.எச் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்களினால் இந் நூலின் பிரதிகள் லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் துணைவியார் திருமதி லாலி கொப்பேகடுவ மற்றும் மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் மனைவி திருமதி மானெல் விமலரத்ன ஆகியோருக்கும் இலங்கை இராணுவ போர் வரலாற்றின் வீரர்களின் நினைவாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாஹ சங்க உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழு பிரதானியுமான திரு சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள்,வெளிநாட்டு இராஜதந்திரிகள், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, கொழும்பு ஆனந்தா கல்லூரியின் அதிபர், பிரபல அறிஞர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.