Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2022 20:38:35 Hours

ஜப்பான் தூதுவர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கௌரவ மிசுகோசி ஹிடேயிகி (Mizukoshi Hideaki) மற்றும் இலங்கையில் உள்ள தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் யுயுகி யோகோஹாரி ஆகியோர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை புதன்கிழமை (9) இராணுவ தலைமையக இராணுவ தளபதி அலுவலகத்தில் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் பொதுவான விடயங்கள் மற்றும் இராணுவத்தின் வளர்ச்சி தொடர்பான பல கருத்துகள் கலந்துரையாடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கை ஆயுதப் படைகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் கூட்டுப் பயிற்சிகளில் பங்குபற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

சிநேகபூர்வ சந்திப்பின் இறுதியில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கௌரவ ஜப்பான் தூதுவர் ஆகியோர் நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்புக்கான நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்கிரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி மற்றும் இராணுவ தளபதி உதவியாளர் கேணல் ஆர்எடிஎஸ் ராஜபக்ஷ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஆகியோரும் சந்திப்பில் இணைந்திருந்தனர்.