Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2023 00:43:39 Hours

சேவை வனிதையர் பிரிவின் 39 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கர்ப்பிணி பெண் சிப்பாய்களுக்கு பரிசு

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 39 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 50 அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் மற்றும் பரிசுப் பொதிகளை, பெண் அதிகாரிகள் உட்பட இராணுவ கர்ப்பிணி பெண்களுக்கு புதன்கிழமை (12) இராணுவத் தலைமையக பல்நோக்கு விழா மண்டபத்தில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அவர்களுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி சாமா வனசிங்க, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவில் உள்ள ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் நினைவாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுடன் குழு படத்தில் கலந்து கொண்ட இராணுவப் பெண்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவினர் வழங்கிய மதிய உணவு விருந்திலும் கலந்து கொண்டனர். இந் நாளின் நினைவுகளைச் சேர்க்கும் வகையில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுடன் குழு படம் எடுத்துக் கொண்டனர்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவ்விடத்திற்கு வருகை தந்ததும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். பின்னர் மங்கள விளக்கேற்றியதை தொடர்ந்து இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமாகியது. பின்னர் இறந்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 39 ஆண்டுகால வரலாற்றை குறிக்கும் இராணுவ வீரர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் மரணமடைந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக அதன் பல்வேறு நலன்புரி சேவைகள் தொடர்பான குறும்பட ஒளிபட தொகுப்பு ஔிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்வில் வழங்கப்பட்ட பரிசு பொதிகளில், கைக்குழந்தைகள் மற்றும் அந்தந்த தாய்மார்களுக்குத் தேவையான அனைத்து சுகாதார உதவிகளும் அடங்கும். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் என் மகாவிதான கேஎஸ்வி மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.