Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th March 2022 21:50:58 Hours

சேதன பசளை தொடர்பில் கலந்துரையாடல்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் 'பசுமை விவசாயம்' மற்றும் சேதன பசளை விநியோக ஒருங்கிணைப்பு தொடர்பிலான மேலும் ஒரு விழிப்புணர்வு கலந்துரையாடல், பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் வழிகாட்டுதலின்படி முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைப்பெற்றது.

இக்கலந்துரையாடலில் 59 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டி.சூரியபண்டார மற்றும் 64 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதில் சேதனை பசளை உற்பத்தி செயல்முறையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சேதனை பசளை விநியோகித்தல் மற்றும் பயிர்ச்செய்கைக்கான சேதனை பசளை பயன்பாடுகள் மற்றும் சிறு போகத்திற்கான நெல் வயல்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திரு. ஆர்.கோகுலதாசன், ஒட்டுசுட்டான் விவசாய சேவை நிலையத்தின் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. கே.சுகந்தன், ஒட்டுசுட்டான் விவசாய சேவை நிலையத்தின் விவசாயப் பயிற்றுவிப்பாளர் திரு. எஸ்.பானுஜன் மற்றும் கங்காரா ஹோல்டிங்ஸ் உர நிறுவனத்தின் கோட்டப் பணிப்பாளர் திரு. எம்.செந்துலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதன்படி, 15 சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஒரு இராணுவ வீரர்கள் குழு கலந்துரையாடலில் பங்குபற்றியது.