Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th May 2018 16:36:02 Hours

சிறு குழந்தைகளை இதய நோயிலிருந்து காப்பதற்காக இராணுவத்தினரின் பங்களிப்பு

இதய நோயில் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்காக அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘Little Hearts’ – குழந்தைகளின் இதயம் எனும் நிதி திரட்டும் திட்டத்திற்கு இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் ஆலோசனைக்கமைய இலங்கை இராணுவத்தினரின் தாராள மனப்பான்மையைக் காட்டும் முகமாக 70 மில்லியன் ரூபா பணம் (10) ஆம் திகதி வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.

இராணுவத்தின் அனைத்து அங்கத்தவர்களின் அவர்களின் ஒரு நாள் ஊதியங்கள் மூலம் இந்த நிதிக்கு பாதி தன்னார்வமாக இப் பணத்தில் ஒதுக்கப்பட்டு இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இலங்கை இராணுவம் புதிய முன்முயற்சியால் நாடுபூராக தேசிய வைத்திய கட்டிட மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதுடன் (Congenital Heart Disease – CHD) "இதய நோய்" காரணமாக பாதிக்கப்பட்ட நம் குழந்தைகளின் நிலைமையை உணர்ந்து இராணுவ தளபதியவர்கள் ஆரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு இந்த நிதி நன்கொடையால் பொரலையில் அமைந்துள்ள மகளிர் ரிட்ஜ்வே ஆர்யா குழந்தை மருத்துவமனை வளாகத்தில் இதய நோய் மற்றும் தீவிர சத்திர சிகிச்சைக்கான 10 மாடி கட்டிடம் அமைப்பதற்காக இந் நிதி வழங்கப்பட்டது.

அதேபோல்,நாட்டின் அமைதி மற்றும் இந் நாட்டின் அபிவிருத்தியின் வளர்ச்சிக்காவும் இதய அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சையின் போது கட்டில்கள் அதிகமாக வழங்குவதற்கும் மருத்துவர்கள் மற்றும் புதிய சுகாதார நிபுணர் கட்டில்கள் 100 க்கும் அதிகமாக வழங்குவதற்கும் தேவையான ஒத்துழைப்பு வழங்குவதாக இராணுவ தளபதியவர்கள் அனைத்து இராணுவ அங்கத்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளர்.

இயற்கை இதய நோயினால் (Congenital Heart Disease – CHD) இலங்கையில் 1000 க்கும் அதிகமான சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டள்ளதுடன் 10 க்கும் அதிகமான குழந்தைகள் இந் நோயினால் இறந்துள்ளனர்.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட காசோலையானது திரும்பவும் Little Hearts’ - குழந்தைகளின் இதயம் நிதியத்தின் வைத்தியர் துமிந்த சமரசிங்க மற்றும் உறுப்பினர் சுமேத ரனசிங்க அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்விற்கு இராணுவ சுகாதார சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (வைத்தியர்) சஞ்ஜீவ முனசிங்க மற்றும் இராணுவத்தினர் பலரும் கலந்து கொண்டானர்.

latest Running | Sneakers Nike Shoes