Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2022 14:00:53 Hours

சிறுவர் தினத்தை முன்னிட்டு படையினரால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள்

இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் பேரில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் சிறுவர் தின கொண்டாட்டங்களுக்கு இணையாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் 681 வது பிரிகேடின் 6 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் பல சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை சனிக்கிழமை (1) ஏற்பாடு செய்திருந்தனர்.

681 வது பிரிகேட் தளபதியின் பணிப்புரையின் பேரில், 6 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பிரதேசத்தில் உள்ள வறிய கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு 20 உலர் உணவுப் பொதிகளை விநியோகித்தனர்.

அதேவேளை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 66 வது படைப்பிரிவின் 662 வது பிரிகேடின் 20 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினரும் சமூகம் சார்ந்த செயற்திட்டமொன்றை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல நன்கொடையாளரின் அனுசரணையுடன், ஆணைவிளந்தான்குளம் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 30 வறிய சிறார்களுக்கான பாடசாலைக் காலணிகளை சனிக்கிழமை (1) படையினர் வழங்கினர்.

20 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் நெருக்கமான மேற்பார்வையில் இந்த நன்கொடை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதினாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, ஹபரணை 53 வது படைப்பிரிவு படையினர் தமது சொந்த செலவில், ‘உலக சிறுவர் தினத்தை’ முன்னிட்டு சியாம்பிளாந்துவ புபுது ஆரம்ப பாடசாலை மற்றும் திகம்பத்தனை சிங்கித்தி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை எழுது பொருட்களை விநியோகிக்கும் நிகழ்வை சனிக்கிழமை (1) ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சியின் முடிவில், அங்கு கல்வி கற்கும் சிறுவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் சுவையான மதிய உணவை படையினர் வழங்கினர். இந்த நன்கொடை நிகழ்ச்சி 53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உதய ஹேரத் அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.

இதேவேளை, 64 வது படைப்பிரிவின் 642 வது பிரிகேடின் 17 வது (தொ) கஜபா படையணியின் படையினர், மற்றுமொரு சமூகம் சார்ந்த நிகழ்ச்சியாக பெரியத்திமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தங்களின் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட பாடசாலை புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வெள்ளிக்கிழமை (30) அன்பளிப்பு செய்தனர். இந்த நன்கொடை நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களுக்கு அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கும் சிற்றுண்டி, தேநீர் மற்றும் சுவையான மதிய உணவை படையினர் வழங்கினர். இந்நிகழ்வில் 17 வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, 23 வது கஜபா படையணி மற்றும் 3 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் படையினர் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சூரியவெவ ஹத்பொறுவ அரசினர் கனிஷ்ட பாடசாலையில் மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை சனிக்கிழமை (1) அன்பளிப்பாக வழங்கினர். படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க அலரிஸ் லங்கா (தனியார்) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.தரங்க வீரவர்தன அவர்களினால் இந்த நிகழ்ச்சி திட்டத்திற்கு அனுசரணை வழங்கப்பட்டது.

அதே நேரத்தில், நன்கொடை நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக பாடசாலையின் 322 மாணவர்களுக்கும் சிறந்த மதிய உணவை படையினர் வழங்கினர். 122 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நதீகா குலசேகர அவர்களின் மேற்பார்வையில் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

மேலும், மின்னேரியா காலாட் படையணி பயிற்சி நிலையத்தின் படையினர், பொலன்னறுவை, கிரித்தலேகம அரச தேசிய பாடசாலையில் தரம் 9 ல் கல்வி கற்கும் மாணவர்களின் பங்கேற்புடன் உலக சிறுவர் தினம் மின்னேரியா காலாட் படையணி பயிற்சி நிலைய வளாகத்தில் சனிக்கிழமை (1) கொண்டாடப்பட்டது.

மின்னேரிய காலாட் படையணி பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் சந்தன ரணவீர அவர்களின் பணிப்புரையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

சிறுவர் தினத்தன்று, 12 வது படைப்பிரிவின் 121 வது பிரிகேடின் 18 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர், மாளிகாவில, தம்பேகொடை ‘போசத்’ பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் 30 மாணவர்களுக்கு சுவையான உணவு மற்றும் பரிசுகளை வழங்கினர். அன்றைய நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் படையினர் ஆரம்ப பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்தியதுடன், விளையாட்டு மைதானத்தில் உள்ள உபகரணங்கள் தொடர்பில் தேவையான பழுதுபார்க்கும் பணிகளையும் மேற்கொண்டனர்.

12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால, 121 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக உடோவிட்ட மற்றும் 18 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் மூன்று நாட்கள் கொண்ட இத் திட்டத்தை மேற்பார்வையிட்டனர்.

தம்புள்ளை கிரலகொல்லவில் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு சிறுவர் தின நிகழ்ச்சியில் பாடசாலை புத்தகங்கள் உட்பட அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (1) மாத்தளை குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டில் இடம்பெற்றது. படையினர்கள் அந்தக் குழந்தைகளை மகிழ்விக்க கலிப்சோ இசை நிகழ்ச்சியையும் வழங்கினர்.

இதேவேளை, மாத்தளை நாவுல விஷேட படையணியின் படையினர் சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்க்ளுக்கு புத்தகம் வழங்கும் திட்டத்தையும், ‘செனெஹச’ பௌத்த சிறுவர் அபிவிருத்தி நிலையம் மற்றும் பிரதீபா பௌத்த பெண்கள் சிறுவர் இல்லத்திற்கும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை (1) முன்னெடுத்தனர். மேலும், சிறுவர் தினத்தை முன்னிட்டு மாத்தளை கவுடுபெலல்ல சிங்கள வித்தியாலய மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியினை விஷேட படையணியின் நிலையத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் பணிப்புரையின் பேரில் விஷேட படையணியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்றது.

இதற்கிடையில், சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் திட்டத்திற்கு அமைய முல்லைத்தீவு கறிப்பட்டமுறிப்பு கிராம மக்களுக்கான கழிவு நீரை சுத்திகரிக்கும் புதிய கருவி நிறுவப்பட்டது. இந்த திட்டத்திற்கான அனுசரணையை இலங்கை சத்தியசாய் சர்வதேச அமைப்பின் தலைவர் திரு வி மனோகரன் வழங்கினார்.

புதிய சுத்திகரிப்பு கருவி செயற்பாட்டு தொடக்க நிகழ்வில், அப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 வறிய குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

திரு வி மனோகரன் தனது சுருக்கமான உரையில் இராணுவத்தின் சிவில் பாத்திரங்களைச் செயல்படுத்துவதைப் பாராட்டியதுடன், பயனாளிகளுக்கு தேவைகளை வழங்குவதில் மிகவும் பயனுள்ள மற்றும் சிக்கனமான முறையில் சமூகத் திட்டங்களை நிர்வகிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, 23 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு சமங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 25 மதிய உணவுப் பொதிகளை வழங்கினர்.

இதேவேளை, 64 வது படைப்பிரிவின் 643 வது பிரிகேடின் 8 வது இலங்கை பீரங்கி படையினர் சிறுவர் தினத்தை முன்னிட்டு தந்தியமலை கிராமசேவை பிரிவிலுள்ள பெரியசம்பலன் ‘ஜன’ பாலர் பாடசாலை வளாகத்தில் டெங்கு நோய் ஒழிப்பு சிரமதானம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடன் இணைந்து சிறுவர் தினத்தன்று (அக்டோபர் 1) முன்னெடுத்தனர்.