Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th June 2023 18:15:34 Hours

சர்வதேச பூப்பந்து போட்டியில் இராணுவ வீரருக்கு வெண்கலப் பதக்கம்

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சிப்பாய் பிடீடீடி குணதிலக மற்றும் அவரது பங்குதாரர் திரு.வீரன்நெட்டசிங்க ஆண்களுக்கான சர்வதேச சவால் கின்ன பூப்பந்துப் போட்டியில், வெண்கலப் பதக்கத்தை வென்றனர். இப் போட்டி ஜூன் 05 முதல் 10 வரை மாலைதீவில் இடம்பெற்றது.

உலக பூப்பந்து சம்மேளனம் இந்த போட்டியை சீன விளையாட்டு உடைகள் மற்றும் விளையாட்டு உபகரண நிறுவனமான லி-நிங்கின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்தது. சர்வதேச பூப்பந்து போட்டித் தொடரில் இதுவும் ஒன்று, உலக தரவரிசையில் வீரர்களை அணுகும் உலக அரங்கில் இப்போட்டி அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.