Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2021 19:07:04 Hours

கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் கொவிட் – 19 கட்டுப்பாட்டின் முன்னேற்றம் தொடர்பாக மதிப்பீடு

கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு குழுவின் வழக்கமான அமர்வில் (11) பிற்பகல் கலந்து கொண்டு இலங்கையில் கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்பாட்டின் முன்னேற்றங்கள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.

கடந்த காலங்களில் தொற்றுக்களின் வீழ்ச்சிக்குக் காரணம், பயணங்கள், பொதுக்கூட்டங்கள், விழாக்கள், திருமணங்கள் போன்றவற்றுக்கு அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாகும், ஆனால் இப்பொழுது தொற்றுக்கள் 500 - 700 என்ற அளவில் சற்று அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில், அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாலும், பெரிய கூட்டங்கள், திருமணங்கள், இறுதிச் சடங்குகள், கட்டின பூஜை போன்றவை காரணமாக இருக்கலாம் என்றும் ஜெனரல் சவேந்திர சில்வா இக் கூட்டத்தில் தெரிவித்தார்.

“மினுவாங்கொடை, தம்புத்தேகம, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரத்தில் ஒரு சில பிரதேசங்களில் நெரிசல்கள் காரணமாக எதிர்வரும் நாட்களில் தொற்றுக்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவும், பயணக் கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்பட்ட போதிலும், அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனையின்படி சில கட்டுப்பாடுகளுடன் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், என இராணுவத் தளபதி கூறினார்.

மேலும் இறப்பு விகிதம் குறைவு மற்றும் பீசிஆர் பரிசோதனைகள், பல்கலைக்கழகம் மற்றும் ஆயுர்வேத பல்கலைக்கழக மாணவர்கள், வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு தடுப்பூசி போடுதல், 3 வது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசி வழங்குதல், அரச அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு தடுப்பூசி வழங்குதல் போன்றவை விடயங்கள் பற்றி விளக்கினார். வீட்டு தனிமைப்படுத்தல் செயல்முறை மற்றும் பொது தனிமைப்படுத்தல் நடைமுறைகள் மற்றும் இடை நிலை பராமரிப்பு மையங்கள் ஆகியவை கோவிட்-19 கட்டுப்பாட்டுக்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு பெரிதும் பங்களித்துள்ளன என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கூறினார்.

இதன் பின்னர் சுகாதார அதிகாரிகள், வல்லுநர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் பணிக்குழு உறுப்பினர்கள் கொடிய வைரஸின் பரவும் முறைகள் மற்றும் அதன் பல்வேறு மாறுபாடுகள், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து பரவுவது சம்மந்தமாக சுட்டிக்காட்டினர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, உலகளாவிய தொற்றுக்கள், தனியான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சர்வதேச சூழ்நிலைகள் தொடர்பான புள்ளிவிபரங்களை எடுத்துக்காட்டினார்.