Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th October 2023 07:11:42 Hours

கெமுனு ஹேவா சேவை வனிதையரால் அதன் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசு

கெமுனு ஹேவா படையணியின் குடும்பங்களைச் சேர்ந்த க.பொ.த.(உ/த) பரீட்சையில் சித்தியடைந்த நான்கு பேருக்கு கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவினால் வியாழன் (ஒக்டோபர் 19) அன்று குருவிட்ட கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் ரூ 25,000/= பொறுமதியான புலமைப்பரிசுகள் வழங்கப்பட்டன.

கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதர அவர்கள் இந்த திட்டத்திற்கு தலைமை தாங்கியதுடன், பொன்டெரா வரையறுக்கப்பட்ட்ட தனியார் நிறுவனம் மற்றும் கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவின் முன்னாள் உறுப்பினரான திருமதி மும்தாஸ் ஆகியோரின் நிதியுதவியில் இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், ‘இலங்கை சிவில் சட்டம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு’ என்ற தலைப்பில் பாடசாலை மாணவர்கள் மற்றும் படைப்பிரிவின் சிப்பாய்களுக்கு விசேட விரிவுரை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வின் நிறைவில் கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான மதிய உணவும் வழங்கப்பட்டது.