Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th September 2023 22:17:00 Hours

கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதிக்கு 29 வருடபூர்த்தி

கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதியின் 29 வது ஆண்டு விழா வியாழக்கிழமை (செப்டம்பர் 14) தொடர்ச்சியான நிகழ்ச்சிகளில் நினைவுகூரப்பட்டதுடன் கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதி மேஜர் ஜெனரல் எம்.டப்ளியு.டிசி மெத்தானந்த யுஎஸ்பீ என்டிசி அவர்களால் முன்மொழியப்பட்டது.

புதன்கிழமை (செப்டெம்பர் 13), நன்னடத்தை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தின் பணியாளர்களுடன் இணைந்து தர்மபால போசத் பெண்கள் இல்ல வளாகத்தைச் சுத்தப்படுத்தும் ஒரு சமூக பணி முன்னெடுக்கப்பட்டது.

மேற்கூறிய பெண்கள் இல்லத்தில் வசிக்கும் 46 ஆதரவற்ற பிள்ளைகளுக்கு சத்தான மதிய உணவு வழங்கப்பட்டது. இதன்போது சிறுமிகளுக்கான பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அதேபோல் மின்னேரிய தேவாலயதத்துக்கு செல்லும் குளக்கரையில் இருபுறமும் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு புனித வளாகம் அழகுபடுத்தப்பட்டது.

ஆண்டு நிறைவு நாளில் (செப்டம்பர் 14) கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது படையினருக்கு உரையாற்றிய அவர் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும் ஊக்குவிக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதே நாளில் சோமாவதிய விகாரையில் ஒரு 'போதி பூஜையும்’ நடத்தப்பட்டதுடன் பங்கேற்பாளர்களிடையே ஒற்றுமை மற்றும் ஆன்மீக உணர்வை வளர்க்கும் நிகழ்வாக அது அமைந்தது.

கேணல் கிழக்கு முன்னரங்க பாராமரிப்பு பகுதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.