Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th November 2023 22:40:50 Hours

கிழக்கு பாதுகாப்பு படையினரால் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் உலர் உணவுப் பொதிகள்

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 231 வது காலாட் பிரிகேடிட் படையினர் பொலன்னறுவை அரலகன்வில பிரதேசத்தில் வசிக்கும் 75 கர்ப்பிணிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்ச்சியை வியாழக்கிழமை (நவம்பர் 02) அரலகன்வில பிரதிபா அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களின் போஷாக்கு தேவையை கருத்தில் கொண்டு இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் 231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎஸ் ஜயவர்தன ஆர்எஸ்பீ ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் 12 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜிஎஸ் ரணசிங்க அவர்களினால் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வேண்டுகோளின் பேரில் இத்திட்டத்திற்கான செலவுக்காக சுமார் ரூ.500,000.00 நன்கொடையை பிரபல கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹாநாம மற்றும் மேஜர் ஜெனரல் குமுதுபெரேரா (ஓய்வு) ஆகியோரினால் வழங்கப்பட்டது

மேஜர் ஜெனரல் எம்.கே.யூ.பீ. குணரத்ன அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அந்தப் பரிசுப் பொதிகளை வழங்கியதுடன், விளையாய மத்திய கல்லூரி மாணவர்களின் கலாசார நடனங்கள் நிகழ்விற்கு மேலும் அழகு சேர்த்தன. மேலும், நிகழ்வின் போது கர்ப்பிணி பெண்களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி பொதிகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 231 வது காலாட் பிரகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரலகங்வில விலயாய மத்திய கல்லூரியின் அதிபர் திரு ஜி.எச்.பீ குமார மற்றும் மஹாவலி பி வலயத் தொகுதியின் முகாமையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.