Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th October 2023 21:01:22 Hours

கிழக்கு பாதுகாப்புப் படையினரால் நடாத்தப்பட்ட சிறுவர் தின நிகழ்ச்சிகள்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யூ.பீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ ஐஜி அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின் கீழ் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 - 04 ஆம் திகதி வரை உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படைப்பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் படையலகுகள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.

22 வது காலாட் படைப்பிரிவின் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினர் மற்றும் 20 வது கஜபா படையினரால் மொல்லிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் பரண மதவாச்சிய பாடசாலையில் சிறுவர் தின நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.

இரண்டு நிகழ்வுகளிலும் 455 பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன், 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையினர் கந்தளாய் பிரதேசத்தில் வசிக்கும் 150 சிறுவர்களுக்கான நிகழ்ச்சியை கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் ஏற்பாடு செய்திருந்தனர். குழந்தை மருத்துவ நிபுணர் திருமதி திலக்ஷி மதுரப்பெரும அவர்களின் உதவியுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

23 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதலின் கீழ், 7 வது இலங்கை கள பீரங்கிப் படையணியின் படையினர் ரொட்டவ ஆலோகராம தம்ம பாடசாலையின் 130 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன், 12 வது கெமுனு ஹேவா படையினர் தெஹியத்தகண்டிய ஸ்ரீ இந்திரசர சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் 22 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினர்.

மேலும் 232 வது காலாட் பிரிகேட் படையினர் 464 மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கிரண் மத்திய கல்லூரியில் ஏற்பாடு செய்தனர்.

233 வது காலாட் பிரிகேட் படையினர் வாகரை மகா வித்தியாலயத்தில் கட்டிடமொன்றை புனர்நிர்மானம் செய்ததுடன், நவசேனபுரத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான திரு. கே.எம். மசூர்தீன் அவர்களுக்கு 9 வது இலங்கை பீரங்கிப் படையணியின் கட்டளை அதிகாரியினால் சக்கர நாற்காலி அவரது பிள்ளையிடம் வழங்கப்பட்டது.

மேலும், 24 வது காலாட் படைப்பிரிவின் படையினர் விஷன் ஹோப் பாலர் பாடசாலையைச் சேர்ந்த 45 சிறார்களுக்கு பரிசுப் பொதிகள் மற்றும் மதிய உணவு வழங்கினர். 241 வது மற்றும் 242 வது காலாட் பிரிகேட் படையினரினால் அக்கரைப்பற்று, மணல்ச்சேனை, துளசி மற்றும் சங்கமன்கந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 196 மாணவர்களுக்கான பாடசாலை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இப்பாடசாலை புத்தகங்கள் பிரதமகுரு வண. வரகாபொல இந்திரசிறித் தேரர் மற்றும் முஹுது மகா விகாரையின் தர்ம பாடசாலை பழைய மாணவர்கள் ஆகியோரின் அனுசனையில் 14 வது இலங்கை சிங்க படையினர் லாகுகல மகுல் மகா விகாரையின் தர்ம பாடசாலையின் 85 பிள்ளைகளுக்கும் 11 ஆசிரியர்களுக்கும் உணவு வழங்கினர்.

18 வது விஜயபாகு காலாட் படையினரால் கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்கள் மற்றும் 40 மாணவர்களுக்கு பாடசாலை காலணிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. 8, 11 மற்றும் 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் புனித ஜோசப் தேவாலய பாலர் பாடசாலை, சியாபத் பாலர் பாடசாலை, நீத்தா, மாரநாத மற்றும் அண்ணாமலை பாலர் பாடசாலை ஆகியவற்றின் 99 பிள்ளைகளுக்கு பரிசுப் பொதிகள், எழுதுபொருட்கள் மற்றும் மதிய உணவை வழங்கினர்.

கிழக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் வழிகாட்டுதலின் கீழ், 4 வது இலங்கை இராணுவ சேவைப் படையினர் ஹிங்குராங்கொட போசத் சிறுவர் இல்லத்தின் மைதானத்தை சுத்தம் செய்தனர்.

3 வது இராணுவ போர் கருவி படையணி றோட்டாவெவ வீரமுத்து பாலர் பாடசாலையின் 25 பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கினர். அதே சந்தர்ப்பத்தில் 2 வது இராணுவ பொலிஸ் படையணியினால் சுவையான சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. 3 வது (தொ) இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையினர் கல்கந்த பாலர் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்ததுடன், 3 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையினர் மஹரத்மலே ரத்மல் பாலர் பாடசாலை மற்றும் மின்னேரிய சிறுவர் பூங்காவை புனரமைத்தனர்.

அதேபோன்று, 5 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையினரால் தனிப்பட்ட மற்றும் வாய் ஆரோக்கியம் பற்றிய விரிவுரையை நடாத்தியதுடன், திம்பிரிகஸ்யாய கனிஸ்ட உயர் பாடசாலையின் 71 மாணவர்களுக்கு உணவு வழங்கி வைத்திய பரிசோதனையும் நடாத்தினர்.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிள்ளைகளுக்கான உபசரிப்பு, தேநீர் விருந்து, மதிய உணவு, பரிசுகள் வழங்கப்பட்டதுடன், இசை மற்றும் பொழுது போக்கான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. உலக சிறுவர் தினத்தை கொண்டாடுவதன் மூலம் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதே முதன்மை நோக்கங்களாகும்.

22, 23 மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள் முறையே மேஜர் ஜெனரல் ஜி.எம்.என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ, மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, மற்றும் கிழக்கு முன்னரங்க பாராமரிப்புபகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டபிள்யூ.டி.சீ மெத்தானந்த யூஎஸ்பீ என்டிசீ ஆகியோரால் இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பிரிகேட் தளபதிகள் மற்றும் படையலகுகளின் கட்டளை அதிகாரிகளினால் ஏற்பாடுகள் அனைத்தும் மேற்பார்வையிடப்பட்டன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.