Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th October 2023 21:08:17 Hours

கிழக்கு படையினரால் குச்சவெளியில் சுனாமி அனர்த்த முகாமைத்துவ ஒத்திகை

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவின் படையினர் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளின் நெருக்கமான ஒத்துழைப்புடன் குச்சவெளி பொதுப் பகுதியில் சமூகத்தை எச்சரிக்கும் வகையில் சுனாமி அனர்த்த முகாமைத்துவ தடுப்புப் தொடர்பான பயிற்சினை 04 ஓக்டோபர் 2023 மேற்கொண்டனர்.

அந்நூர் முஸ்லிம் கல்லூரியில் 700 பொதுமக்கள், 353 மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் என மொத்தம் 1,073 நபர்களுடன் குச்சவெளி அந்நூர் முஸ்லிம் கல்லூரியில் இப் பயிற்சி நடாத்தப்பட்டது. அவர்கள் அனைவரும் ஆயத்தப் பயிற்சியில் தீவிரமாக பங்கேற்றனர். பயிற்சியின் போது, சுனாமி பேரழிவு ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய உடனடி நடைமுறை குறித்து ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கே.கே.எஸ் பெரக்கும் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் இலங்கை கடற்படை, விசேட அதிரடி படையின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், வேல்ட் விஷன் (World Vision), பெற்றோலிய கூட்டுத்தாபனம், செஞ்சிலுவைச் சங்கம், குச்சவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவு சிறுவர் நிதியத்தின் பல பங்குதாரர்களின் ஒருங்கிணைப்புடன் 20 வது கஜபா படையணியன் கட்டளை அதிகாரியினால் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.