Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th August 2023 09:35:34 Hours

கிழக்கு தளபதி 24 வது காலாட் படைப்பிரிவின் பகுதிகளுக்கு விஜயம்

அண்மையில் பதவியேற்ற கிழக்குப் பாதுகாப்புப்படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் ஓகஸ்ட் 21-23 இல் அம்பாறை 24 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கீழ் உள்ள படையணிகளுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

ஓகஸ்ட் 21 அன்று, 24 வது காலாட்படை பிரிவிற்கு விஜயம் செய்த மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜி அவர்களை பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை அளித்து 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் அனைத்து அதிகாரிகளும் அவரை அன்புடன் வரவேற்றனர். வருகை தந்த தளபதி 24 வது காலாட் படைப்பிரிவின் படையினருக்கு உரையாற்றினார்

விஜயத்தின் நினைவுகளைச் சேர்க்கும் வகையில் கிழக்குப் பாதுகாப்புப்படைத் தலைமையக தளபதி வளாகத்தில் மரக்கன்று நாட்டியதுடன், குழு படமும் எடுத்துக் கொண்டார். கிழக்குப் பாதுகாப்புப்படைத் தலைமையக தளபதி 24 வது காலாட் படைப்பிரிவின் விஜயத்தின் பின்னர் அதன் கீழ் உள்ள தீகவாப்பிய மறுசீரமைப்பு திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் செங்கல் உற்பத்தி திட்டம் ஆகியவற்றை மேற்பார்வையிட்டார்.

கிழக்குப் பாதுகாப்புப்படைத் தலைமையக தளபதி மதச்சடங்குகளுக்கு முன்னுரிமை அளித்து மறுநாள் (22) முஹுது மஹா விஹாரை மற்றும் ஓகந்த விஹாரைக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கிழக்குப் பாதுகாப்புப்படைத் தலைமையக தளபதி 241 மற்றும் 242 வது காலாட் பிரிகேட் படைப்பிரிவுகளின் கீழ் உள்ள அக்கரைப்பற்று மற்றும் மட்டக்களப்பில் கல்லடி பகுதிகளுக்கும் விஜயம் செய்ததுடன், அன்று மாலை, 24 வது காலாட் படைப்பிரிவில் அதிகாரிகள் உணவகத்தில் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

கிழக்குப் பாதுகாப்புப்படைத் தலைமையக தளபதி ஓகஸ்ட் 23 அன்று 243 காலாட் பிரிகேட் மற்றும் புத்தங்கல ராஜா மஹா விஹாரைக்கும் விஜயத்தை மேற்கொண்டார். பின்னர் காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் 24 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் அம்பாறை முதியோர் இல்லத்தில் நடைபெற்ற நன்கொடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன், நுரைச்சோலை வீடமைப்புத் திட்டத்தையும் பார்வையிட்டார்.

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டனர்.