Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th September 2023 08:10:02 Hours

கிழக்குப் படையினர் இரால்குளத்துக்கான நிவாரணத் திட்டம் ஆரம்பிப்பு

இரால்குள பிரதேசத்தில் வறுமையில் வாழும் குடும்பங்கள் மற்றும் மாணவர்களின் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 232 வது காலாட் பிரிகேட்டின் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் அனுசரணையாளர்கள் மற்றும் தாராளமனபான்மையுடையவர்களுடன் இணைந்து இரால்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 23 முன்னெடுத்தனர்.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் இரால்குளம் பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 50 குடும்பங்களுக்கு தலா 7600/= பெறுமதியான 50 உலர் உணவுப் பொதிகளும் 200,000/=, பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் இரல்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 41 சிறார்களுக்கும், பெரியவட்டுவான் கண்ணகி பாடசாலையில் கல்வி கற்கும் 17 சிறார்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சித் திட்டம் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் ஆசிர்வாதத்துடன் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பி.எம்.சி வன்னிநாயக்க அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

திரு. பிரியந்த விஜேசிங்க, திரு. துஷன் ஜயவர்தன மற்றும் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரின் தாராளமான அனுசரணையில் இத் திட்டம் சாத்தியமானது.

இந் நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யூ.பீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந் நிகழ்வில் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரி, 232 வது காலாட் பிரிகேட்டின் சிவில் அலுவல்கள் அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.