Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th June 2018 15:00:45 Hours

கிளிநொச்சி படையினரால் மரக் கன்றுகள் விநியோகம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 571 மற்றும் 574 ஆவது படைத் தலைமையகம் இணைந்து சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு மரக் கன்றுகள் (3) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை விநியோகிக்கப்பட்டன.

கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள புதுமுறிப்பு, மலையாளபுரம், அம்பகாமம் மற்றும் மர்த்தநகர் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு இந்த மரக்கன்றுகள் இராணுவத்தினரால் விநியோகிக்கப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவீர அவர்களது எண்ணக் கருவிற்கமைய 57 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களது வழிக் காட்டலின் கீழ் பலா, பலு. வீர , ஒரன்ஞ், பாக்கு, ஈரப்பலாக்காய் மரக் கன்றுகள் இந்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த மரக் கன்றுகள் கிளிநொச்சியில் அமைந்துள்ள பரைபஞ்ஞான் பிரதேசத்தில் வைத்து 57 ஆவது படைத் தளபதியினால் (3) ஆம் திகதி இப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டன. இச்சமயத்தில் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் கிராம சேவகர்கள் இணைந்து கொண்டனர்.

இந்த செயற்பாடுகளுக்கு 7 ஆவது இலேசாயுத காலாட் படையணி, 4 ஆவது சிங்கப் படையணி, 9 விஜயபாகு காலாட் படையணி மற்றும் 16 (தொ) இலேசாயுத காலாட் படையணி ஒத்துழைப்பை வழங்கியது.

மேலும் கிளிநொச்சி நகர பிரதேசத்தில் ஏ – 9 வீதிகளில் 571, 574 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 7 ஆவது இலேசாயுத காலாட் படையணி, 4 ஆவது சிங்கப் படையணி, 9 ஆவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 16 (தொ) இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த 350 இராணுவத்தினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Sportswear free shipping | Nike Air Max 270