Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th July 2017 11:07:57 Hours

கிளிநொச்சி படையினரால் கண் கிளினிக்கு மூலம் மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் 65ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களின் ஒத்துழைப்புடன் கடந்த செவ்வாய்க் கிழமை (04) கண் பரிசோதனைக்கான நடமாடும் சேவையானது கிளிநொச்சி நெலும் பியச மண்டபத்தில் இடம் பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோலிற்கிணங்க கொழும்பு விசன் கெயார் (Colombo Vision Care) திரு தர்ஷன பொண்சேகா உள்ளடங்களான குழுவினரின் தலைமையில் நடாத்தப்பட்ட இந் நடமாடும் சேவையின் மூலம் பார்வைக் குறைபாடுள்ள 244 நோயாளர்கள் கண்டறியப்பட்டதுடன் 210 பார்வைக் குறைபாடுள்ள நோயாளர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளையும் 34 பார்வைக் குறைபாடுள்ள நோயாளர்களுக்கு வாசிப்பு மூக்குக் கண்ணாடிகளையும் வழங்கினர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண அவர்கள் இந் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பாரிய அனுசரனையையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வைத்த அனுசரனையாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

bridge media | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth