Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th November 2023 20:16:44 Hours

கிளிநொச்சியில் சட்டவிரோத மற்றும் சமூக விரோத செயல்களுக்கு எதிராக போராட ஒன்று கூடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான கூட்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், அண்மைக்காலமாக 553 வது காலாட் பிரிகேட் கிளிநொச்சி பகுதியில் அதிகரித்துள்ள சட்டவிரோதங்களை கட்டுபடுத்தும் நோக்கில் கலந்துரையாடுவதற்காக உயர்மட்ட இராணுவம், பொலிஸ், விஷேட அதிரடி படை மற்றும் அரசாங்க அதிகாரிகள் 55 வது காலாட் படை பிரிவு தலைமையகத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 9) சந்தித்தனர்.

55 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கே.என்சீ ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 553 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜிஎஸ்கே பெரேரா ஆர்எஸ்பீ பீ அவர்களால் முதல் கூட்டம் நடாத்தப்பட்டது.

மணல் அகழ்வு, போதைப்பொருள் கடத்தல், திருட்டு போன்ற சட்டவிரோத மற்றும் சமூக விரோதச் செயல்கள், சிவில் சமூகத்திற்கும் சமூக நலனுக்கும் அச்சுறுத்தலாக அமைவது போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

சமூக மேம்பாடு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கான பொறுப்பை படைப் பிரிவு தளபதி ஏற்றுகொண்டதுடன் இந்த சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அனைத்து அரச நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பொறிமுறையின் கட்டாய தேவையை அவர் வலியுறுத்தினார்.

கிளிநொச்சி மாவட்டம் மற்றும் அதன் மக்களுக்கு செழிப்பான, பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்ட 55 வது காலாட் படைப்பிரிவு பிராந்தியத்தில் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் முதல் கூட்டம் இதுவாகும் .