Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2022 13:11:14 Hours

காங்கேசதுரையில் 'தற்கால ஆய்வறிக்கை ' தொடர்பாக வழங்கல் பயிற்சி பட்டறை

'தற்கால ஆய்வறிக்கை '-கட்டம் 1 தொடர்பான வழங்கல் பட்டறையானது 2022 செப்டம்பர் 27 காங்கேசன்துறை இராணுவ முகாமில் ஆரம்பமானது. இந்த பாடநெறியானது, உபகரண மாஸ்டர்கள், உதவி வழங்கள் அதிகாரிகள், மேஜர்கள் (நிர்வாகம் மற்றும் விடுதி), படையணி இரண்டாம் நிலை தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டன.

இப் பட்டறையானது மூலதனப் பணிகள், மன்னோக்கி மற்றும் வெளியேறும் நடைமுறைகள், உணவு மற்றும் எரிபொருள் விநியோக நடைமுறைகள், அடிப்படை ஒழுங்குமுறை நடைமுறைகள் மற்றும் கணக்கெடுப்பு வாரியம், உபகரணங்கள் மற்றும் வாகனங்களைப் பராமரித்தல் மற்றும் இராணுவ ஒழுக்கத்தை பராமரித்தல் உள்ளடங்களாக 3 கட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு படையலகுகளின் தலைமையகத்திலிருந்து 16 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தலைமையக வழங்கள் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அவர்களின் கருத்தியல் மற்றும் அறிவுறுத்தல் பேரில், வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பகுதியின் தளபதி பிரிகேடியர் கிளிஃபோர்ட் சொய்சா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் அனுமதியுடன் வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பகுதியில் இந்த முழுப் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆரம்ப உரையை வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பகுதியின் தளபதி அவர்கள் நிகழ்த்தினார்.

அன்றைய நிகழ்வுகளில், 5 வது பொறியாளர் சேவை படையணி, 5 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி, 5 வது இலங்கை இராணுவ போர்க்கருவி படையணி, 4 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணி, 4 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியாளர் படையணி, 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி மற்றும் இராணுவ தள வைத்தியசாலை கட்டளை அதிகாரிகள் மற்றும் இராண்டாவது கட்டளை அதிகாரிகளினால் தொடர் விரிவுரைகள் நடாத்தப்பட்டன.