Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2023 19:20:56 Hours

கஷ்ட பிரதேச கர்ப்பிணிப் பெண்களுக்கு இராணுவ ஒருங்கிணைப்பு மூலம் ஊட்டச்சத்துக்கள் வழங்கல்

அமெரிக்காவில் வசிக்கும் வண. பிராமணகாம முதித தேரரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் குழு கிரிஇப்பன்வெவ, நிகவெவ, எஹட்கஸ்வெவ, நவ கஜபாபுர, நவ மொனரவெவ, ஜனகபுர மற்றும் ஹெலம்பவெவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இராணுவ ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடுகள் மூலம் 40 உலர் உணவுப் பொதிகளை செவ்வாய்கிழமை (மார்ச் 28) கிரிஇப்பன்வெவ மகா வித்தியாலயத்திற்கு அழைத்து வழங்கினர்.

ஒவ்வொரு பொதியும் ரூபா 5000/= பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கியிருந்ததுடன், வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் ஆசீர்வாதத்துடன் 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஏனோஜ் ஹேரத்தின் வழிகாட்டுதலின்படி கீழ் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

திரு. சந்திரனபால மற்றும் திருமதி. சந்திரததிலக்க, திரு தினேஷ், திரு ஜீவா விதானராச்சி மற்றும் அவரது அன்பு மகன் திரு. நாமல் குமார, திருமதி வேணுரி ரத்னபால ஆகியோர் திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்தனர்.

இவ் வழங்கல் நிகழ்வின் போது 622 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 9 வது கஜபா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி மற்றும் படையினரும் உடனிருந்தனர்.