Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th July 2023 21:27:54 Hours

கலாஓயா இராணுவ தொழிற்பயிற்சி மையத்தில் 65 அதிகார வாணையற்ற அதிகாரிகளுக்கு பயிற்சி நிறைவு

கலாஓயா இராணுவ தொழிற்பயிற்சி மையத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தேசிய தொழில் தகுதி நிலை 3 மற்றும் 4 போன்ற தொழில் பயிற்சியான மின் திருத்தினர் பாநெறி, தட்சு பாநெறி, மேசன் பாநெறி, குழாய் பொருத்தல் பாநெறி, வெதுப்பக பாநெறி, சமையல் பாநெறி மற்றும் பண்யாளர் பாநெறி போன்றவை இராணுவ தொழிற்பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) நிறைவுற்றது.

கலாஓயா இராணுவ தொழிற்பயிற்சி மையத்தின் தளபதி பிரிகேடியர் எச்வீ அனில் சோமவீர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, அவர்கள் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொழிற்பயிற்சி அதிகார சபை அதிகாரிகள் முன்னிலையில் தேசிய தொழில் தகுதிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.

பல்வேறு படையணிகளை சேர்ந்த 65 அதிகார வாணையற்ற அதிகாரிகள் இலங்கையின் தொழிற்பயிற்சி அதிகாரசபையுடன் இணைந்து 6 மாத கால பாடநெறிகளை நிறைவு செய்தனர்.

சான்றிதழ் வழங்கும் விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பயிற்றுனர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.