Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th June 2023 20:05:07 Hours

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வன்னி படையினரால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தாய்வான் தேரவாதி சமாதி பௌத்த அமைப்பின் நிதியுதவியுடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் கர்ப்பிணிப் தாய்மார்களுக்கான அத்தியாவசியப் பொதிகள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் உள்ளடங்கப்பட்ட பொதிகள் சனிக்கிழமை (03) வவுனியா பிரதேசத்தில் வழங்கப்பட்டது.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இப்பகுதியில் உள்ள 140 கர்ப்பிணிப் தாய்மார்களுக்கு இந்த அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் கைக் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் தாய்மார்களுக்கு தேவையான 21 பொருட்கள் உள்ளடங்கிய தலா ரூ: 25,000/= பெறுமதியான பொதிகளும் வழங்கப்பட்டன.

நாகாநந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் தாய்வான் தேரவாதி சமாதி பௌத்த அமைப்பின் தலைவருமான வண. கலாநிதி போதகம சந்திம தேரர் அவர்கள் இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இத் திட்டத்தை ஏற்பாடு செய்தார்.

வண. உடுவே தம்மாலோக்க தேரரின் தலைமையில் சமய அனுஷ்டானங்கள் இடம் பெற்றதை தொடர்ந்து விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது. நன்கொடை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட தாய்வான் தேரவாதி சமாதி பௌத்த அமைப்பின் 40 தாய்வான் பிரஜைகள் மற்றும் பயனாளிகள் உறவினர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திட்டத்தின் இறுதியில் அனைத்து கர்ப்பிணிப் தாய்மார்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது. வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.