Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th October 2023 08:42:41 Hours

கனடாவில் வசிக்கும் வைத்தியரால் கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு பரிசாக மருத்துவப் பொருட்கள்

டொராண்டோவைச் சேர்ந்த வைத்தியர் இமிந்து லியனகேவினால் வைத்தியர் (திருமதி) ஷர்லி இலுக்கும்புர விஜேசிங்க ஊடாக கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு 3 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான கொலோஸ்டமி பைகள் மற்றும் பேஸ்கள், கிளினிக்கல் பவுடர் கொள்கலன்கள் மற்றும் தெளிப்பான்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 24) அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இராணுவத் தலைமையகத்தில் இராணுவ ஊடக ஆலோசகர் திரு.சிசிர விஜேசிங்கவின் ஒருங்கிணைப்பின் ஊடாக வைத்தியர் இமிந்து லியனகேவின் 30வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த பரிசுகள் வழங்கப்பட்டன.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்எம்ஜேபி ரத்நாயக்க ஆர்எஸ்பீ மற்றும் பிரதிப் பணிப்பாளர் கேணல் பிஏபீ லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

திருமதி குசும்அதிகாரி, வைத்தியர் (திருமதி) ஷர்லி இல்லுக்கும்புர விஜேசிங்க மற்றும் திரு சிசிர விஜேசிங்க ஆகியோரால் பரிசுகள் கையளிக்கப்பட்டன.