Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2023 17:04:06 Hours

'கந்துரட்ட எப்எம்' இல் வளரும் வானொலி ஒலிபரப்பாளர்கள் இராணுவ ஊடக பணிப்பகத்திற்கு விஜயம்

கண்டியில் உள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 'கந்துரட்ட எப்எம்' வானொலி நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான பயிற்சியில் இருக்கும் மாணவ குழுவிற்கு வெள்ளிக்கிழமை (செப். 22) இராணுவத் தலைமையகத்தில் உள்ள இராணுவ ஊடக பணிப்பகத்தில் அங்கு பணிபுரியும் அதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

'பிபெனகெகுலு' (மலரும் பிள்ளைகள்) வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளரான திரு.பிரின்ஸ் ஹேரத் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, ஊடகப் பணிப்பகத்தின் பணிப்பாளரும் இராணுவ ஊடகப் பேச்சாளருமான பிரிகேடியர் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ மற்றும் ஊடகப் பணிப்பகத்தின் பல அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் அவர்கள் வரவேற்கப்பட்டனர்.

ஒலிபரப்பாளர் திரு.பிரின்ஸ் ஹேரத் தலைமையிலான 29 சிறுவர்களை கொண்ட குழு, கண்டி பிரதேசத்தின் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊடகப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களினால் ஊடகப் பணிப்பக அலுவலக வளாகத்திற்கு வரவேற்கப்பட்டதுடன், பணிப்பகத்தின் செயல்பாடுகளை படங்களுடன் விளக்கமளித்தார்.

கலந்துரையாடல்களின் போது, பார்வையாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பிரிகேடியர் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் அவர்களினால் தெளிவான பதில்களை வழங்கியதுடன், வருகை தந்த குழு ஊடக பணிப்பகத்தின் பிரிவுகளின் அந்தந்த பொறுப்பாளர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக அவதானித்தது.

அறிமுக விஜயத்தின் இறுதியில் பிரிகேடியர் ஐ.எச்.எம்.ஆர்.கே ஹேரத் குழுத் தலைவர் திரு.பிரின்ஸ் ஹேரத்துக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார். திரு பிரின்ஸ் ஹேரத், மற்றும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பங்கேற்பாளர்களால் நன்றி உரை ஆற்றப்பட்டது. அன்றைய நினைவுகளாக பல படங்களும் எடுக்கப்பட்டன.