Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2023 10:44:32 Hours

கண்டி படையினரால் ஹந்தானையில் சிக்கிய இளங்கலை மாணவர்கள் மீட்பு

கண்டி ஹந்தானை மலைத்தொடரில் டிசம்பர் 2 ஆம் திகதி மேற்கொண்ட பயணத்தின் போது சிக்கித் தவித்த 183 பேர் கொண்ட இளங்கலை மாணவர்களை, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 111 வது காலாட் பிரிகேட் மற்றும் 2 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் 5 அதிகாரிகள் மற்றும் 34 சிப்பாய்கள் கொண்ட குழுவினர் முதலில் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர்.

மலையேற்ற சுற்றுப்பயணத்தின் போது 183 இளங்கலைப் பட்டதாரி குழு மாலையில் இருண்ட வானிலைக்கு மத்தியில் பாதை தவறியதாக அறிக்கைகள் உறுதிப்படுத்தின.

இச் செய்தி கண்டி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, 39 பேர் கொண்ட இராணுவ மீட்புக் குழுவினர், சீரற்ற காலநிலை மற்றும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட ஹந்தானை மலைப் பகுதிகளுக்கு விரைந்து சென்றனர். மேகமூட்டமான வானிலை மற்றும் அடர்ந்த இருள் அவர்களின் தேடுதல் நடவடிக்கைகளுக்கு தடையாகவும் இருந்தன.

ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலை 4.00 மணியளவில், இராணுவ மீட்புக் குழுவினர் வழி தவறிய இளங்கலை மாணவர்களை கண்டுபிடித்து அவ்விடத்தை சென்றடைந்தனர்.

2 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் மீட்பு குழு சுமார் ஆறு மணி நேர தேடுதலின் பின்னர் அவர்களை கீழே அழைத்து வந்தனர். மீட்புப் பணியில் பொலிஸாரும் தமது உதவிகளை வழங்கினர்.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 111 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 2 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் மீட்பு பணியை நெருக்கமாக ஒருங்கிணைத்து கண்காணித்தனர்.