Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th July 2023 21:09:34 Hours

கட்டளை அதிகாரிகளின் பராமரிப்பு எல்லைகள் குறித்து விரிவுரை

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஜூலை 27, 28 ஆம் திகதிகளில் 'சிவில் நிர்வாகத்திற்கு இராணுவ ஆதரவு' என்ற தலைப்பில் இரண்டு நாள் செயலமர்வு நடாத்தப்பட்டது.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யு.டி. விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிவில் நிர்வாகத்திற்கான இராணுவ ஆதரவு (கட்டளை அதிகாரிகளின் பொறுப்புகள்), இராணுவத்தின் நிர்வாகம் மற்றும் வழங்கல், கட்டளை அதிகாரிகளின் பொறுப்புகள், மனித வள முகாமை, சமூக தகராறுகள், போதைப்பொருள், பொது ஆலோசனை மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் குறித்து இவ் விரிவுரையில் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை பொலிஸாருக்கான ஒத்துழைப்பு மற்றும் சட்ட அமுலாக்கம் என்ற தொனிப்பொருளில் விரிவுரை நடாத்தப்பட்டது.

இரவு விரிவுரையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலாநிதி அஜித் ரோஹன விரிவுரையில் கலந்து கொண்டதுடன், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

24 வது காலாட் படைப்பிரிவுத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இப் பயிற்சித் திட்டத்தை மேற்பார்வையிட்டதுடன், 48 கட்டளை அதிகாரிகள், இரண்டாம் கட்டளை அதிகாரிகள், மற்றும் பணிநிலை அதிகாரிகள் இரண்டு விரிவுரைகளிலும் கலந்து கொண்டனர்.