Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th April 2024 16:16:41 Hours

கஜபா படையணியின் 13 வது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ். பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ நியமிப்பு

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ். பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ தலைமையகத்தில் 2024 ஏப்ரல் 08 ம் திகதி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களிடம் இருந்து கஜபா படையணியின் படைத் தளபதிக்கான நியமனத்தை பெற்றுக்கொண்டார்.

சிரேஷ்ட அதிகாரியான இவர் கஜபா படையணியின் 13வது படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்தாக இப்பதவியினை இராணுவத் தளபதி வகித்ததுடன் உத்தியோக பூர்வமாக இப்பதவி இராணுவ பதவி நிலை பிரதானிக்கு கையளிக்கப்பட்டது. படையணியின் படைத் தளபதி என்பது படையலகுகளின் முக்கிய பங்கு, படையணியின் வரலாறு, சம்பிரதாயம் மற்றும் மதிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும். இந்த நியமனம் அவரது தலைமைத்துவ திறன்கள் மற்றும் படையணியின் இலட்சிய அர்ப்பணிப்புக்கான நம்பிக்கை மற்றும் அங்கீகாரத்தின் அடையாளமாகும்.

இராணுவத் தலைமையகத்தில் கடமையாற்றும் கஜபா படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.