Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2024 11:08:20 Hours

கஜபா படையணியின் புதிய படைத்தளபதி பதவியேற்பு

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் கஜபா படையணியின் 13 வது படைத்தளபதியாக மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் சலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 11) பதவியேற்றார்.

படையணி படைத்தளபதி மதிப்புமிக்க நியமனம், பொதுவாக மேஜர் ஜெனரல் பதவியில் இருக்கும் இராணுவத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகளால் இப் பதவி வகிக்கப்படுகிறது. பாரம்பரியமாக, இராணுவத் தளபதி அல்லது இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்டும் படையணியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் படையணி படைத்தளபதியாக நியமனம் வகிப்பார்.

இலங்கை இராணுவத்தில், இராணுவத் தளபதி அனைத்து படைப்பிரிவுகளின் ஒட்டுமொத்த தளபதி என்ற மதிப்பிற்குரிய பதவியை வகிக்கிறார். இதைக் கருத்தில் கொண்டு, கஜபா படையணியினை வழிநடத்தும் மதிப்புமிக்க பாத்திரத்தை தனது தனித்த அதிகாரி ஒருவருக்கு ஒப்படைத்து, தளபதி அவர்கள் விதிவிலக்கான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதுடன் அங்கு அவர் தனது திறமைகளையும் நிபுணத்துவத்தையும் மேம்படுத்தினார்.

இராணுவத் தளபதி அவர்களே இராணுவ பதவி நிலை பிரதானிக்கு அவரது முன்மாதிரியான தலைமைத்துவத்தையும் படையணிக்கான அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து 08 ஏப்ரல் 2024 அன்று இந்த மரியாதைக்குரிய நியமனத்தை வழங்கினார்.

நுழைவாயில் சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் நிலையத்தளபதி மற்றும் பணிநிலை அதிகாரிகளும் அன்புடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, கஜபா படையணியின் ஸ்தாபகத் தந்தை, மறைந்த மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்ன அவர்களின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன், அவருக்கு அணிவகுப்பு மைதானத்தில் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை இடுவதன் மூலம் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். பின்னர், படையணியின் புதிய படைத்தளபதி வளாகத்தில் மரக்கன்றினை நட்டு குழு படம் எடுத்துக்கொண்டார்.

இந் நிகழ்வில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, முதலாம் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.