Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கஜபா படையணியின் ஓய்வுபெற்ற படைவீரர்கள் சங்கத்தின் புதிய செயற்குழு நியமனம்

கஜபா படையணியின் முன்னாள படைவீரர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (26) பத்தரமுல்லை ‘அபேகம’ வளாகத்தில் படையணியின் சிரேஷ்ட முன்னாள் படைவீர்ரகளின் ஒன்றுகூடலுடன் இடம்பெற்றது.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்கள் மற்றும் பல தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜி டப்ளியூ டப்ளியூ டப்ளியூ டப்ளியூ எம் சீ எம் விக்ரமசிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூபீஎஸ்சி, நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்பீஎஆர்பீ ராஜபக்‌ஷ ஆகிய இருவரும் முறையே கஜபா படையணயின் உறுப்பினர்களிடையே மரண நன்கொடை நிதியத்தின் நலன்கள் மற்றும் 'சுவசான நிதியின்' நன்மைகள் குறித்து தனித்தனியான விரிவான கணக்குகளை கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.

இந் நிகழ்வின் போது சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் படைவீரர்களின் நலன்புரித் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்காக சங்கத்திற்கு 1 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கினார்.இக்கூட்டத்தில் புதிய அலுவலக செயற்குழுவும் நியமிக்கப்பட்டதுடன் அதில் லெப்டினன் ஜெனரல் ஜகத் டயஸ் (ஓய்வு) கஜபா படையணி படைவீரர் சங்கத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.சிரேஷ்ட ஓய்வு பெற்ற அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட கஜபா படையணி படைவீரர்கள் இவ் வருடாந்த பொதுக்கூட்டத்தில் இணைந்து கொண்டனர்.