Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th August 2023 09:51:54 Hours

ஓய்வுபெற்ற கொடி தர அதிகாரிகள் அறிவியல் போட்டி – 2023 இல் கஜபா படையணி வெற்றி

ஓய்வுபெற்ற கொடி தர அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்த ‘ஓய்வுபெற்ற கொடி தர அதிகாரிகள் அறிவியல் போட்டி - 2023’ வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 25) பொரலஸ்கமுவ கோல்டன் ரோஸ் விடுதியில் இடம்பெற்றது.

இந்தப் போட்டி ஓய்வுபெற்ற அனைத்து முப்படை வீரர்களின் பொது அறிவுத் தரங்களை ஆய்வு செய்வதற்கு, ஓய்வுபெற்ற கொடி தர அதிகாரிகளின் ‘உங்களுக்குத் தெரியுமா’ போட்டியில் இலங்கை இராணுவம் (60 அணிகள்), இலங்கை கடற்படை (20 அணிகள்), இலங்கை விமானப்படை (5 அணிகள்) மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி – 1 அணி என பல குழுக்கள் பங்கேற்றனர்.

ஓய்வுபெற்ற கொடி தர அதிகாரிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் இந்நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பிள் அவர்கள் கலந்து கொண்டார்.

இராணுவத்தின் கஜபா படையணி சாம்பியன்ஷிப்பை வென்றதுடன், இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தின் இராணுவ சமிக்ஞை படையணி முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றன.

போட்டியின் முடிவில், ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பிள், எயர் சிப் மார்ஷல் ககன் புலத்சிங்கள ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ எம்பிள் (பாதுகாப்பு கற்கைகள்) எம்எஸ்சி (பாதுகாப்பு கற்கைகள்) முகாமை முதுமானி, எம்ஐஎம் (இலங்கை) என்டிசி பீஎஸ்சி ஆகியோருடன், ஓய்வுபெற்ற கொடி தர அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

மேஜர் ஜெனரல் (கலாநிதி) கேடிபி பெரேரா (ஓய்வு), மேஜர் ஜெனரல் டபிள்யூஜிஎம்யுஆர் பெரேரா (ஓய்வு), ஓய்வுபெற்ற சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர யூஎஸ்பீ பீஎஸ்சி, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அணி வெற்றியாளர்கள் பின்வருமாறு:

1 ஆம் இடம் - கஜபா படையணி

- மேஜர் ஆர்எம்எஸ் கொப்பேகடுவ
- மேஜர் ஜிடிஐ மைத்திரிபால
- மேஜர் பீஎம்பீ பன்னலகே

2 ஆம் இடம் - இலங்கை கடற்படை

- லெப்டினன் கொமாண்டர் எச்ஏடிபீ ஹெல்கும்புர
- லெப்டினன் கொமாண்டர் ஜிஎம் குணசேகர
- லெப்டினன் கொமாண்டர் டபிள்யூஎம் விக்கிரமசிங்க

3 ஆம் இடம் - இராணுவ சமிக்ஞை படையணி

- மேஜர் எம்ஆர் ஹமீம்
- மேஜர் எஸ்எல் மீகொட
- கெப்டன் டிகே ராமசிங்க