Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th March 2023 19:33:58 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் பணிக்கு தளபதி பாராட்டு

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் அமைச்சர் ஆலோசகராக (பாதுகாப்பு) நியமனம் பெற்ற இலங்கை சிங்க படையணியின் மேஜர் ஜெனரல் எச்.டி.கே ஹெய்யன்துடுவ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இராணுவ தளபதியின் அலுவலகத்திற்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் புதன்கிழமை (29) அழைக்கப்பட்டார்.

இந்த சந்திப்பின் போது, இராணுவத்தில் 34 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய மேஜர் ஜெனரல் எச்.டி.கே ஹெய்யன்துடுவ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பி அவர்கள் காலாட் படையணி குடும்பத்தின் உறுப்பினராக இராணுவத் தளபதியிடமிருந்து பாராட்டுக்களை பெற்றுக்கொண்டார்.

மே 2009 க்கு முன்னர் மிக உயர்ந்த திறன் கொண்ட காலாட் படையணி அதிகாரியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உச்சக்கட்டத்தின் போது அவரின் பங்களிப்பு மற்றும் மதிப்புமிக்க பணிகளின் நினைவுகளை இராணுவத் தளபதி புதுப்பித்தார்.

இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி தனது பணிக்காலம் முழுவதிலும், குறிப்பாக சவாலான காலகட்டங்களில் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போர்க்களத்தில் சேவையாற்றிய போது அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவை இராணுவத் தளபதி பாராட்டினார்.

உரையாடல்களின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னமும் குடும்பத்தினருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் எச்டிகே ஹெய்யன்துடுவ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 23 ஜனவரி 1989 இல் இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்டதுடன், அவர் இரண்டம் லெப்டினன் நிலைக்கு இலங்கை சிங்கப் படையணியில் நியமிக்கப்பட்டதற்கு முன்னர், தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி 31 ஏ யில் இராணுவப் அடிப்படை பயிற்சியைப் பெற்றார். அவர் மே 18, 2022 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் ஓய்வுபெறும் போது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் அமைச்சு ஆலோசகர் (பாதுகாப்பு) பதவியை வகித்து வருகிறார். போர்க்களத்தில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண விக்கிரம பதக்கம்’, மற்றும் ‘ரண சூர பதக்கம்’ ஆகிய பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 7 வது சிங்கப் படையணியின் படைக் குழு கட்டளையாளர், இராணுவ தலைமையகத்தின் ஆளனி (நிர்வாகம்) பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 3, 231 வது காலாட் பிரிகேடின் பணிநிலை அதிகாரி (செயல்பாடுகள்) 3, 8 வது சிங்கப் படையணி கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையகம் ஊடக பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2, 7 வது சிங்கப் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, ஹைட்டியில் உள்ள 9 வது இலங்கை பாதுகாப்பு ஐக்கிய நாடுகளின் ஸ்திரப்படுத்தல் பணிக்காக கட்டளை அதிகாரி, 22 வது காலாட் படைப்பிரிவு பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 57 வது காலாட் படைப்பிரிவு பொதுப் பணிநிலை அதிகாரி 1, 7 வது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, சிங்கப் படையணி தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம்), சிங்கப் படையணி தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1, 65 வது காலாட் படைப்பிரிவு கேணல் பொதுப் பணி, புனர்வாழ்வு ஆணையாளர் பணிப்பக பணிநிலை அதிகாரி, 513 வது காலாட் பிரிகேட் தளபதி, 533 வது பிரிகேட் தளபதி, அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் மற்றும் இராணுவ தலைமையக நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் ஆகிய பதவிகளை அவர் வகித்துள்ளார்.

அவரது சேவைக் காலத்தில் அவர் படையலகு கட்டளை அதிகாரி தந்திரோபாய பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, ஆயுத அணிநடை கள பொறியியல் பயிற்சி பாடநெறி பாகிஸ்தான், இளம் அதிகாரிகள் பாடநெறி பாகிஸ்தான், இளம் கட்டளை அதிகாரி பாடநெறி இந்தியா, சீனாவின் கூட்டு நடவடிக்கைகளின் அதிகாரிகளுக்கான பாடநெறி, படையணி தளபதி பாடநெறி பங்களாதேஷ் மற்றும் பாலின ஆலோசகர் பயிற்சி பாடநெறி ஆஸ்திரேலியா உட்பட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி பாடநெறிகளை பயின்றுள்ளார்.

மேலும், அவர் இலங்கை நிறுவனத்தின் உயர் தேசிய பத்திரிகை மற்றும் ஊடக முகாமைத்துவ டிப்ளோமா மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அனர்த்த பகுப்பாய்வு முகாமை மற்றும் தணிப்பு ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.