Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2022 19:14:21 Hours

ஓய்வுபெறும் முதலாம் படையணி தளபதிக்கு தளபதி வாழ்த்து

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கமாண்டோ படையணியின் சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் ஏகேஜிகேயு ஞானரத்ன என்டிசி பிஎஸ்சி அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் முன் அவருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில் புதன்கிழமை (14) சந்தித்தார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வுபெற்று செல்லும் முன் மேஜர் ஜெனரல் ஏகேஜிகேயு ஞானரத்ன என்டிசி பீஎஸ்சி அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் தனது குடும்ப உறுப்பினர்களுடன், இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, அவர்களின் அழைப்பின்பேரின் இராணுவ அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இராணுவத்தில் 34 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய கமாண்டோ குடும்பத்தின் உறுப்பினரான மேஜர் ஜெனரல் ஏகேஜிகேயு ஞானரத்ன என்டிசி பீஎஸ்சி அவர்கள் இராணுவத் தளபதியிடமிருந்து அர்பணிப்புக்கான பாராட்டுக்களை பெற்றார். மே 2009 க்கு முன்னர் மிக உயர்ந்த கமாண்டோ அதிகாரியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் இறுதி கட்டத்தில் அவரின் பங்களிப்பு மற்றும் மதிப்புமிக்க கடமைகள் தொடர்பான நினைவுகளை இராணுவத் தளபதி பகிர்ந்து கொண்டார்.

ஓய்வுபெற்று செல்லும் மேஜர் ஜெனரல் மற்றும் அவருடன் வருகை தந்த மகளுடன் சில இன்பங்களைப் பகிர்ந்துகொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் குறித்து ஆராய்ந்ததுடன் அவருக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியின் கடமையின் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு வழங்கிய ஆதரவையும் அவர் பாராட்டினார்.

மேஜர் ஜெனரல் ஏகேஜிகேயு ஞானரத்ன என்டிசி பீஎஸ்சி அவர்களும் இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

உரையாடலின் முடிவில், லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் குடும்பத்திற்கு ஒரு சிறப்பு பரிசுடன் பாராட்டு மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக சிறப்பு நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.

மேஜர் ஜெனரல் ஏகேஜிகேயு ஞானரத்ன என்டிசி பீஎஸ்சி அவர்கள் 1988 பெப்ரவரி 12 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் பயிளிலவல் அதிகாரியாக இணைந்தார். பாடநெறி இல. 29 இன் கீழ் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், கமாண்டோ படையணியின் இரண்டாம் லெப்டினன் பதவியில் நியமிக்கப்பட்டார். அவர் 28 ஜனவரி 2021 அன்று மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடதக்தாகும்.

அவர் ஓய்வுபெறும் போது கமாண்டோ படையணியின் படைத் தளபதியாகவும் முதலாம் படையணியின் தளபதியாகவும் நியமனம் வகித்தார். அத்துடன் குழுத் தளபதி, கடத்தல் மற்றும் பணயக் கைதிகள் பாதுகாப்பு குழு கட்டளை அதிகாரி, நிறைவேற்று அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிற்றுவிப்பு அதிகாரி, பிரிகேட் மேஜர் கமாண்டோ பிரிகேட், பயிற்சி பணிப்பகத்தின், செயல்பாடுகள் மற்றும் பயிற்சி அதிகாரி 1, கமாண்டோ பயிற்சி பாடசாலை தலைமையகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர், இரண்டாவது கட்டளை அதிகாரி, நடவடிக்கை கட்டளை அதிகாரி கொழும்பு, -முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் பொதுபணி பதவி நிலை அதிகாரி, இராணுவ போர் கல்லூரியில் தலைமை பயிற்றுவிப்பாளர் , 523 வது காலாட் பிரிகேட் தளபதி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பிரதி தளபதி, கமாண்டோ பிரிகேட் தளபதி மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி மற்றும் 14 வது காலாட் படைபிரிவின் தளபதி போன்ற பல முக்கிய நியமனங்களையும் அவர் நிறுவனத்தில் வகித்துள்ளார்.

இவர், நிலையான இராணுவ பாடநெறி (SMC – 903), ஐக்கிய இராச்சியத்தின் அடிப்படை வானில் பாய்தல் பாடநெறி, இந்தியா - காட்டக் (கமாண்டோ பாடநெறி), இந்தியா - இளம் அதிகாரிகள் பாடநெறி, பாக்கிஸ்தான் - கனிஸ்ட கடடளை பாடநெறி, இந்தியா - சிரேஸ்ட கட்டளை பாடநெறி, இந்தியா - உயர் பாதுகாப்பு திசைமுகப்படுத்தல் பாடநெறி, பங்களாதேஷ் – தேசிய பாதுகாப்பு கல்லூரி பாடநெறி உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு இராணுவ கற்கைகளை அவர் பின்பற்றியுள்ளார். அவற்றில் கமாண்டோ பாடநெறி, அடிப்படை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்புப் கற்கை, கடத்தல் தடுப்பு மற்றும் பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கை கற்கை, இளம் அதிகாரிகள் கற்கை, SLIDA இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் சந்திப்பு நுட்பங்களில் சான்றிதழ் கற்கை, பணியாளர் கல்லூரி, முகாமைத்துவ தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கலக எதிர்ப்பு திறன் மேம்பாட்டு டிப்ளோமா ஆகிய கற்கைகளையும் பின்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.