Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th May 2023 17:05:39 Hours

ஓய்வுபெறும் பதவி நிலை பிரதானிக்கு இராணுவ தளபதி வாழ்த்து

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் விசேட படையணியின் சிரேஷ்ட அதிகாரியும் பிரதி பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத்யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை திங்கட்கிழமை (29) காலை இராணுவத்தின் தலைமையகத்தில் சந்தித்தார்.மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத்யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சிறப்புமிக்க சேவையில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் முன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத்யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் விசேட படையணிக் குடும்பத்தின் உறுப்பினராக இராணுவத்தில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தில் தனது அர்ப்பணிப்பு மிக்க சேவைக்காக இராணுவத் தளபதியிடமிருந்து பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களையும் பெற்றார். மே 2009 க்கு முன்னர் மிக உயர்ந்த திறன் கொண்ட விசேட படையணியின் அதிகாரியாக பயங்கரவாதத்திற்கு எதிரான இறுதி போரின் போது பங்களிப்பு மற்றும் மதிப்புமிக்க பாத்திரங்கள் தொடர்பான நினைவுகளை இராணுவத் தளபதி நினைவுப்படுத்தினார்.

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்துகொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் தொடர்பாகவும் கேட்டறிந்து அவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். கடமை தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் இருக்க வேண்டியிருந்த வேளையில், தனது தொழில் வாழ்க்கையின் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு அளித்த ஆதரவைப் பாராட்டவும் அவர் தவறவில்லை.

மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத்யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களும் இராணுவத் தளபதியின் அன்பான வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்தார்.உரையாடல்களின் முடிவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் ஓய்வு பெறுபவருக்கு பாராட்டின் அடையாளமாக ஒரு சிறப்பு நினைவுச் சின்னமும் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கினார்.

பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத்யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் 16 மார்ச் 1987 இல் பயிலிலவல் அதிகாரியாக இணைந்துக் கொண்டார். தியத்தலாவ - இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி 27 இல் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாம் லெப்டினனாக நிலையுயர்த்தப்பட்டார். பின்னர் 1988 டிசம்பர் 10 இல் கஜபா படையணியில் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரியாக 1989 அக்டோபர் 10 விசேட படையணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சேவை காலப்பகுதியில் அடுத்தடுத்த நிலைகளுக்கு படிப்படியாக உயர்த்தப்பட்ட பின்னர் இராணுவத்தில், அவர் 2020 ஜூன் 02 அன்று மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார்.

அவர் ஓய்வுபெறும் போது இலங்கை இராணுவத்தின் பிரதிப் பதவி நிலைப் பிரதானியாகவும், விஷேட படையணியின் படைத் தளபதியாகவும் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் மேற்பார்வைக் கட்டளைத் அதிகாரியாகவும் பணியாற்றியதுடன், 3 வது கஜபா படையணி குழு கட்டளை அதிகாரி, 1 வது விஷேட படையணி குழு கட்டளை அதிகாரி, 1 வது விஷேட படையணி இராண்டாம் கட்டளை அதிகாரி, 2 வது விஷேட படையணி குழுவின் கட்டளை அதிகாரி, விஷேட படையணியின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர், விஷேட படையணி பிரிகேட் பிரிகேட் மேஜர், 3 வது விஷேட படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி, 1 வது விஷேட படையணி மற்றும் 3 வது விஷேட படையணி கட்டளை அதிகாரி, விஷேட படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி, 593 வது காலாட் பிரிகேட் தளபதி, விஷேட படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதி, விஷேட படையணி பிரிகேட் தளபதி, கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி, 57 வது காலாட் படைப்பிரிவு தளபதி, 14 வது காலாட் படைப்பிரிவு தளபதி, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதியாகவும் பணி புரிந்துள்ளார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண விக்கிரம பதக்கம்’ மற்றும் ‘ரண சூர பதக்கம் என்பன வழங்கப்பட்டுள்ளன.மேஜர் ஜெனரல் டீஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தனது இராணுவ வாழ்க்கையில் விஷேட படையணிகளின் அடிப்படைப் பாடநெறி, பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி மற்றும் தலைமைத்துவத் திட்டம், அடிப்படை பரசூட் பாடநெறி (இந்தியா), கொமாண்டோ பாடநெறி (இந்தியா), இளம் அதிகாரி பாடநெறி (இந்தியா) தொழிலாண்மை பாடநெறி (பாகிஸ்தான்), இராணுவ கண்காணிப்பு பாடநெறி (இந்தியா), படையலகு கட்டளை அதிகாரி பாடநெறி (சீனா) மற்றும் பாதுகாப்பு மற்றும் வியூகக் கற்கைகள் பாடநெறி (சீனா) போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாடநெறிகளை பின்பற்றியுள்ளார்.

அவர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் (பாதுகாப்பு) பட்டம் மற்றும் சீனாவில் உள்ள பெய்ஜிங்கின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மூலோபாய இராணுவ ஆய்வுகளில் முதுகலை அறிவியல் போன்ற இராணுவம் அல்லாத பட்டங்களையும் படித்துள்ளார்.