Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th November 2022 10:54:55 Hours

ஓய்வுபெறும் இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு

இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு வியாழன் (10) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, அவர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இராணுவ மூன்று தசாப்தங்களுக்கும் மேலான புகழ்பெற்ற சேவையின் பின்னர் ஓய்வு பெறும் போர்க்கருவி பணிப்பகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜிகேஐ விதானாச்சி அவர்கள் இராணுவ தலைமையகத்திற்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அழைக்கப்பட்டார். 33 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் முன்மாதிரியான முறையில் சேவையாற்றிய மேஜர் ஜெனரல் ஜி.கே.ஐ. விதானாச்சி அவர்கள் இராணுவத் தளபதியிடமிருந்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டதுடன், ஒரு முக்கிய வழங்கல் அதிகாரியாக இராணுவத்திற்கான அவரது பணித்திறன், அர்ப்பணிப்பு பணிகளுக்காக பாராட்டப்பட்டார்.

மே 2009 க்கு முன்னர், பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உச்சக்கட்டத்தின் போது வழங்கல் அதிகாரியாக ஆற்றிய பணிகள் மற்றும் மதிப்புமிக்க பாத்திரங்கள் பற்றிய நினைவுகளை அவர் நினைவு கூர்ந்தார்.

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்களையும் விசாரித்து அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் கடமைப் பாத்திரங்களை சரிவர முன்னெடுக்க அவரது குடும்ப உறுப்பினர்கள் முழுவதும் அளித்த ஆதரவைப் பாராட்டுவதற்கு அவர் மறக்கவில்லை.

மேஜர் ஜெனரல் ஜிகேஐ விதானாச்சி அவர்கள் இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி தெரிவித்ததுடன், தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தாம் பெற்ற ஊக்கத்தைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே,அவர்கள் ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் ஜிகேஐ விதானாச்சி அவர்களுக்கு சிறப்பு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன், அவருடைய குடும்ப உருப்பினர்களுக்கும் பாராட்டுக்கான சின்னமாக சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் ஜிகேஐ விதானாச்சி அவர்கள் 1987 ஜூலை 14 இலங்கை இராணுவத்தில் சேர்க்கப்பட்டார். பாடநெறி இல 32 இன் கீழ் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டு இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியில் இணைக்கப்பட்டார். அவர் 03 ஒகஸ்ட் 2022 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

போர்க்கருவி பணிப்பகத்தின் பணிப்பபாளராக ஓய்வுபெறும் அவர் அணி தளபதி, கட்டளை அதிகாரி, நிறைவேற்று அதிகாரி, சிரேஷ்ட களஞ்சிய கட்டுப்பாட்டு அதிகாரி, போர்க்கருவி பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி - I, கட்டளை அதிகாரி, மத்திய ஆயுத மற்றும் வெடிபொருட்கள் களஞ்சிய பொறுப்பதிகாரி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதிகள் – மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் போன்ற பல முக்கிய நியமனங்களையும் அவர் வகித்துள்ளார்.