Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th March 2024 17:01:15 Hours

எயா போர் கல்லூரியின் மூலோபாய ஆய்வுக் குழு இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம்

அமெரிக்காவின் ஏயார் போர் கல்லூரியில் முதுகலை மூலோபாயப் பாடநெறியினை தொடரும் 12 மாணவர்களைக் கொண்ட குழு, ஏயார் போர் கல்லூரியின் பீடாதிபதி கேணல் எடம் ஹில்பர்க் உடன் 05 மார்ச் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தை வந்தடைந்தது. வருகை தந்த தூதுக்குழுவினை ஆராய்ச்சி கருத்து மற்றும் கோட்பாடு பணிப்பாளர் பிரிகேடியர் பீசிஎல் குணவர்தன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் அன்புடன் வரவேற்றார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் மற்றும் இந்து-பசிபிக் பிராந்தியத்தில் இலங்கையின் பங்கு குறித்து தூதுக்குழுவினர் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுடன் இராணுவத் தலைமையகத்தின் பல்லூடக மண்டபத்தில் கலந்துரையாடினார்.

அன்றைய நிகழ்ச்சியின் நிறைவாக, நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தும் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் குழு படங்களும் எடுக்கப்பட்டன.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் அந்தோனி சி. நெல்சன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் திரு சேத் எடம் நெவின்ஸ், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.