Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

உதை பந்தாட்ட போட்டியில் 5 ஆவது எஸ்.எல்.என்.ஜி படையினர் வெற்றி

இலங்கை தேசிய பாதுகாப்பு பட்டாலியன் படையணிகளுக்கு இடையிலான உதைபந்து சாம்பியன்ஷிப் போட்டியானது செப்டெம்பர் 11-12 ஆம் திகதிகளில் முல்லைத்தீவில் உள்ள 13 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 17 படைப் பிரிவுகள் பங்கேற்றதுடன், 5 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு பட்டாலியன் மற்றும் 16 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு பட்டாலியன் இறுதிப் போட்டியில் பங்கேற்றன. இருப்பினும், இந்த போட்டியில் 5 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு பட்டாலியன் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியது.

போட்டியின் இறுதியில் பிரதம அதிதியாக 13 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி.எம்.எஸ். திஸாநாயக்க அவர்கள் கலந்து கொண்டு வெற்றி கிண்ணம் மற்றும் சான்றிதல்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டனர். Sports Shoes | nike air force 1 shadow , eBay