Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2023 19:08:43 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி அதிகாரிகளுக்கு பயிற்சி நாள் செயலமர்வு

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி அதிகாரிகளுக்கு காலாண்டிற்கு ஒருமுறை நடைபெறும் பயிற்சி நாள் வெள்ளிக்கிழமை (01 டிசம்பர் 2023) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தில் படையலகுக்களைச் சேர்ந்த 70 சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

அதிகாரிகளுக்கு காலை உடற்பயிற்சி மற்றும் வாள் பயிற்சியினை தொடர்ந்து ஒருகொடவத்தை கொரியன் டெக்கின் பயிற்றுவிப்பாளரான திரு. சமன் பண்டார அவர்களினால் ‘எலக்ட்ரிகல் ஆட்டோமொபைல் டெக்னாலஜிஸ்’ (இலத்தரனியல் வாகன தொழிநுட்பம்) என்ற தலைப்பில் விரிவுரையை அனைத்து அதிகாரிகளும் செவிமடுத்தனர்.

மேஜர் என்.டி.ஜி.டி நாணயக்கார அவர்கள் பயிற்சி தினத்தில் பங்குபற்றிய அதிகாரிகளுக்கு 'தொழில்முறையில் பொறியியல் அங்கத்துவம்' என்ற தலைப்பில் விரிவுரையை நிகழ்த்தியதுடன், மேஜர் கே.பீ.பீ.சி கருணாநாயக்க அவர்களினால் தொழில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டல்களை வழங்கும் வகையில் 'அதிகாரிகளின் தொழில் வளர்ச்சி' என்ற தலைப்பில் விரிவுரையை நிகழ்த்தப்பட்டது.

பின்னர், படையணி தலைமையக உணவகத்தில் மாலையில் நடைபெற்ற உணவருந்தும் நிகழ்வின் போது கலாநிதி ஜயந்த பெர்னாண்டோ மிகவும் அறிவார்ந்த உரையை ஆற்றினார். இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எஸ்.ஏ.என்.ஜே ஆரியசேன, பிரதி நிலைய தளபதி பிரிகேடியர் சி.களுத்தரஆராச்சி, கேணல் பீ.டி.எல்.ஏ.சி சிறிசேன ஆர்எஸ்பீ மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.