Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th June 2023 18:33:39 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான தொழிட் தகுதி படநெறி நிறைவு

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் பணிப்பின் பேரில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 19 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் தொழிட் தகுதிக்கான 6 மாத தொழிற்துறை முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறியை தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து செவ்வாய்கிழமை (ஜூன் 20) ஒருகொடவத்தையில் உள்ள இலங்கை கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பூர்த்தி செய்துள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, உள்நாட்டு பயிற்சியை வழங்குவதற்காகவும், வெளிநாட்டு ஆதாரங்களை நம்பியிருப்பதைக் குறைக்கவும், பொதுநலவாய நாடுகளில் பரவலாக நடைமுறையில் உள்ள தொழிட்துறையை அங்கீகரிக்கும் நோக்கத்துடன் தொழிட் தகுதிக்கான பாடநெறி உருவாக்கப்பட்டதுடன், இராணுவப் பணியாளர்கள் தங்கள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை நிர்வாகத்தில் நிபுணர்களாக உள்ளனர். மேலும், இது சேமிப்பை உருவாக்கும் மற்றும் பட்டதாரிகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேஜர் ஜெனரல் ஜே.ஏ.ஆர்.எஸ்.கே ஜயசேகர யுஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன ரணசிங்க (ஓய்வு) ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாடநெறியில் தகுதி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள். மேலும், நிறைவுரையின் போது, இலங்கை இராணுவத்திற்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகவும், உயர்தர தொழிற்பயிற்சியை வழங்குவதற்கான அர்ப்பணிப்பிற்கு சான்றாகவும் இது விளங்கும் என இலங்கை மின்சார மற்றும் வலியுறுத்தினார் இயந்திர பொறியியல் பணிப்பாளர் நாயகம் எடுத்துறைத்தார்.

ஆறு மாத காலப்பகுதியில், அர்ப்பணிப்புள்ள பங்கேற்பாளர்கள் மதிப்புமிக்க பயிற்சியை மேற்கொண்டதுடன் அவர்களின் தரத்தில் பலதரப்பட்ட திறன்களைப் பெற்றனர். விரிவான பாடத்திட்டம் தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கியது, பட்டதாரிகள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்க தேவையான நிபுணத்துவம் பெற்றிருப்பதை உறுதி செய்கிறது.

சான்றிதழ் வழங்கும் விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பாடநெறி பங்கேற்பாளர்கள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.