Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th September 2023 20:59:22 Hours

இலங்கை பொலிஸ் படையணியின் சிப்பாய்களுக்கு 'விசாரணை நடைமுறைகள்' தொடர்பான செயலமர்வு

இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் சிப்பாய்களுக்கு 'குற்ற விசாரணைகள்' தொடர்பான அறிவை வழங்குவதற்காக, இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் ஒழுக்க பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஏசீஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சீ எல்எஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய சிறப்புப் புலனாய்வுப் பிரிவான மூன்றாம் கட்ட கல்விச் செயலமர்வு 2023 செப்டம்பர் 11 முதல் 19 வரை வெகுஜன ஊடக அமைச்சின் விரிவுரை மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேணல் எம்எம்எம்பீ மகேஷ் குமார அவர்கள் இந்த நிகழ்வை மேற்பார்வையிட்டதுடன், இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள 35 க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் இந்த ஒரு வார காலப் செயலமர்வில் கலந்துகொண்டனர்.

இராணுவ கணக்காய்வு நடைமுறை மற்றும் லஞ்சம் மற்றும் ஊழலைக் கண்டறிதல், கண்காணிப்பு நுட்பங்கள், அறிக்கை பகுப்பாய்வு, போதைப்பொருட்களை அடையாளம் காணுதல் மற்றும் கண்டறிதல், நீதித்துறை மருத்துவ அதிகாரியின் நுண்ணறிவு, பிரேத பரிசோதனை நடைமுறைகள், ஏல விற்பனை நடைமுறைகள் பற்றிய விரிவான அத்தியாவசிய பாடங்களின் பரப்பை உள்ளடக்கியிருந்தது. சிறப்புப் புலனாய்வுப் பிரிவினால் தெளிவுபடுத்தப்பட்ட ஆயுதக் கடத்தல் தந்திரங்கள், விசாரணை அறிக்கைகளிலிருந்து குற்றப்பத்திரிகைகளை உருவாக்குதல், தடயவியல் வெடிப்பு மற்றும் தீ விசாரணைகள், துப்பாக்கி தொடர்பான விசாரணைகள் மற்றும் தடயவியல் நுட்பங்கள் ஆகியவற்றைக் கையாளுதல், மரபனு மற்றும் தொழிநுட்ப தடயவியல் அறிவியலின் நுணுக்கங்கள், தொடர்பாக இந்த செயலமர்வில் அறிவூட்டப்பட்டன.

இறுதி செயலமர்வு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) நடைபெற்றதுடன், பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் ஏசிஏ த சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சீ எல்எஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.

இச்செயலமர்வில் தங்களுடைய புலனாய்வு அறிவை மேம்படுத்த தங்கள் நேரத்தையும் முயற்சியுடன் பங்கேற்வர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இச் செயலமர்வில் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி தலைமையகத்தின் நிலைய தளபதி பிரிகேடியர் எச்எம்எஸ்ஐ செனரத் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் பல உயர் அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.